‘பியர்’ படத்தில் என்னை சுற்றித்தான் எல்லா விஷயங்களும் நடக்கும்! -தான் நடிக்கும் முதல் தெலுங்குப் பட அனுபவம் பகிர்கிறார் நடிகை வேதிகா

வேதிகா தமிழில் காளை, பரதேசி, முனி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தற்போது தெலுங்கில் முதன்முறையாக ‘பியர்’ எனும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் பேசியபோது, ‘‘இது மிகவும் அருமையான கதை. எந்த மாதிரியான படமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரம் குறித்து நிறைய தயாரிப்புகள் இருக்க வேண்டும். இந்த கதாபாத்திரம் குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். எனது மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது போது பியர் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லர். படத்தில் என்னை சுற்றித்தான் அனைத்து விஷயங்களும் நடக்கும். பெர்ஃபாம் செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளது. இதில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தனக்கு என்ன வேண்டும் என்பதில் இயக்குநர் மிகவும் தெளிவாக உள்ளார்.

படத்திற்கு அனுப் ரூபென்ஸ் இசை அமைக்கிறார். ஆன்ட்ரூ ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர்கள் ஜெயபிரகாஷ், அனீஷ் குருவில்லா, சாயாஜி ஷின்டே என படக்குழுவினர் அனைவரும் மிகவும் அனுபவமிக்கவர்கள் என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here