இயக்குநர் ஆதிக் ஒரு காட்டாறு! -பகீரா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பிரபு தேவா பேச்சு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பஹிரா. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் 8. 10. 2021 அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பிரபுதேவா பேசும் போது, பஹிரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறந்த நடிகர். அவர் ஒரு காட்டாறு. ஆறு வளைந்து வளைந்து சென்று ஒரு கடலில் கலக்கும். அதுபோல் தான் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தில் பல வேலைகளை செய்து ஒரு நல்ல படத்தை இயக்கி இருக்கிறார். முதல் படத்திலேயே சிறப்பாக இசையமைத்து இருக்கிறார் கணேஷ்.

படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும் போது, படத்தில் கதாநாயகிகளே இல்லை. அனைவரும் திறமையான நடிகர்கள். அமைராவிற்கு பிரபு தேவாவுக்கும் நிறைய காம்பினேஷன் சீன்கள் இருக்கிறது. அமைராவிற்கு தமிழ் தெரியாது. ஆனால், நான் சொன்னதை கேட்டு திறமையாக நடித்து கொடுத்தார்.

பஹிரா திரைப்படம் உருவாவதற்கு முக்கிய காரணம் பிரபு தேவா மாஸ்டர் தான். அவரிடம் சீன் சொல்லி நடிக்க சொல்ல பயமாக இருந்தது. என் பயத்தை போக்கினார். பஹிரா படத்தின் கடைசி 7 நாட்களை என்னால் மறக்க முடியாது என்றார்.
விழாவில் சாக்ஷி அகர்வால் பேசும்போது, ”பஹிரா” படத்தின் இயக்குனர் என்னிடம் கதை சொல்லும் போது 7 கதாநாயகிகள் என்று கூறினார். அதை கேட்டவுடன் நான் இந்த படத்தை எப்படி இயக்குவார் என்று பயந்தேன்.
ஆனால், நினைத்ததை விட சிறப்பாக இயக்கியிருக்கிறார். நான் பிரபுதேவாவின் தீவிர ரசிகை. அவருடைய படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி எனவும், உங்களுடன் நடித்ததன் மூலம் என் நீண்டநாள் கனவு நிறைவேறி விட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here