இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், பேச்சாளர் என பன்முக அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான இ.வி. கணேஷ்பாபுவுக்கு இன்டர்நேஷனல் யூனிசெஃப் கவுன்சில் (INTERNATIONAL UNICEF COUNCIL) சிறந்த படத் தயாரிப்பாளர் விருது வழங்கி கெளரவித்துள்ளது.
ஓசூரில் நடந்த இன்டர்நேஷனல் யூனிசெஃப் கவுன்சில் விழாவில் பல்துறை வல்லுனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
திரைத்துறை சார்ந்த விருதுக்கு தேர்வான இ.வி.கணேஷ்பாபுவுக்கு, சிறந்த படத் தயாரிப்பாளர் விருதை ஃபிரான்ஸ் இன்டர்நேஷனல் கவுன்சில் அம்பாஸடர் டாக்டர் டிம்மர்ஸ் ரொமைன் அவர்களும் யுனிஃசெப் தலைவர்
பிரபு அவர்களும் வழங்கி வாழ்த்தினர்!
இ.வி. கணேஷ்பாபு இயக்கிய கட்டில் திரைப்படம், திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளைக் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.