விரும்புகிற உணவு, ஏசி பயணம், தரிசன கட்டணத்துடன் டிரெய்ன் டிக்கெட்… மந்த்ராலயம், ஷீரடி தரிசனத்துக்கு இந்திய ரயில்வேயின் புத்தம்புதிய பாரத் கெளரவ் பயணத் திட்டம்!
இந்திய ரயில்வே ஆன்மிக சுற்றுலாவுக்கென்றே புதிய பயண வழித் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி கோவையிலிருந்து ஷீரடிக்கு பாரத் கெளரவ் திட்டத்தின் கீழ் தனியார் – அரசு பங்களிப்புடன் இயக்கப்படும் முதல் ரயில் சேவை தொடங்குகிறது.
பயணத் திட்ட விவரங்கள்…
கோயமுத்தூரிலிருந்து ஈரோடு, சேலம், பெங்களூரு, மந்த்ராலயம் வழியாக இயக்கப்படுகிறது.
இரண்டு அடுக்கு ஏசி மற்றும் உயர்தர நவீன வசதிகளைக் கொண்ட இந்த வாராந்திர ரயில் பயணம் செவ்வாய் காலை தொடங்கி வெள்ளிக்கிழமை மாலை நிறைவடையும்.
ஒரே கட்டணத்தில் நான்கு நாட்களுக்கான உணவு, ரயில் பயணத்திற்குத் தேவையான படுக்கை விரிப்புகள், தலையணை, போர்வை, கிருமி நாசினி உள்ளிட்ட தினசரி பயன்பாட்டுப் பொருட்கள், ஷீரடியில் போக்குவரத்து வசதி, வியாழன்று சாய் தரிசனம், தரிசனத்திற்கான கட்டணம் என அனைத்தும் அடங்கும்!
பயணிகள் எங்கெல்லாம் ஏறலாம்?
1. கோயமுத்தூர்
2. திருப்பூர்
3. ஈரோடு
4. சேலம்
5. பெங்களூரு
வழங்கப்படும் உணவுகள்…
பயணிகளின் விருப்பத்துக்கேற்ப தென்னிந்திய மற்றும் வட இந்திய ஜெயின் உணவு வகைகள் தரமாக தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான சைவ உணவு வகைகள் வழங்கப்படும்!
கூடுதல் சலுகைகள் என்னென்ன?
பயணிகளின் அவசர மருத்துவ தேவைகளின்போது உடனிருந்து கவனிக்க மருத்துவர் ஒருவர் ரயில் பயணிப்பார்
பயணிகளின் தேவைகளைக் கேட்டறிந்து நிறைவேற்ற சேவை அதிகாரி மற்றும் பயணி உதவியாளர்கள் இருப்பார்கள்
மந்த்ராலயம், ஷீரடிக்கு அனுபவமிக்க வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டிருப்பார்கள்.
சுத்தமான, சுகாதாரமான ரயில்வே கோச்சுகள் மற்றும் கழிப்பறைகள் அமைந்திருக்கும்!
கூடுதல் கட்டணம் செலுத்த முன்வருபவர்களுக்கு அவர்களின் விருப்பப்படி சிறப்பு உணவுகள் தயாரித்து வழங்குகிற சேவையும் உண்டு!
அடுத்த கட்ட சேவை விவரம்…
கோயமுத்தூரைத் தொடர்ந்து சென்னை, மதுரை, கன்னியாகுமரி மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும் விரைவில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
மட்டுமல்லாது வரும் காலங்களில் காசி, ராமேஸ்வரம், திருப்பதி, கயா மற்றும் புனித மாநிலமான உத்ரகாண்ட்டுக்கும் பயணத் திட்டம் விரிவு படுத்தப்படும்!
பிரபல தமிழ் நடிகை ஜனனி பாரத் கெளரவ் பயணத் திட்டத்திற்கான விளம்பரத் தூதுவராக இருக்கிறார்!
பயணத்திற்கான முன்பதிவு மற்றும் கூடுதல் தகவல்களுக்கு saisadanexpress.com என்ற இணைய தளம் செயல்படுகிறது. 93718 66666 / 93719 66666 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.