பிளாக்ஷீப்பின் யூ டியூப் தளத்தில் கன்னிராசி வெப் சீரிஸ்… வெப் சீரிஸில் தமிழின் முதல் 100 மில்லியன் பார்வையாளர்களை எட்டிய குழுவின் அடுத்த அதிரடி!

இளம் வயதினரையும், குடும்பங்களையும் ஈர்க்கும் படைப்புகளுக்கு பெயர் பெற்ற பிளாக்ஷீப் (Blacksheep) குழு, யூ டியூப் தளத்தில் தமிழின் முதல் 100 மில்லியன் பார்வைகளை கடந்த வெப் சீரிஸாக சாதனை படைத்த “ஆஹா கல்யாணம்” என்ற முக்கோணக் காதல் கதையின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இப்போது மீண்டும் “கன்னி ராசி” என்ற தலைப்பில் (மூன்று: ஒன்று) காதல் கதையை துவங்குகிறது.

பிளாக்ஷீப்பின் சொந்த OTT-யான Bs value-க்காகத் உருவாக்கப்படும் இந்த தொடரை இயக்குநர் அன்புதாசன் இயக்குகிறார். இவரது எழுத்து மற்றும் நடிப்பில் உருவான ‘கல்யாண சமையல் சாதம்’ என்ற தொடர் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்ததோடு, இது யூ டியூப் தளத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த தொடர் “என்ன சொல்ல போகிறாய்” புகழ் தேஜூ அஸ்வினியை கோலிவுட்க்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீசைய முறுக்கு, கோலமாவு கோகிலா, ஆதித்ய வர்மா, ஓ மண பெண்ணே போன்ற திரைப்படங்களில் பங்குபெற்றதில் பாராட்டப்பட்ட நடிகராக வலம் வருவதோடு, அன்பு டிஜிட்டல் உலகத்தில் தனது எழுத்து மற்றும் இயக்கத்திற்காக வெறித்தனமான ரசிகர்களையும் கொண்டிருக்கும் அன்புதாசன் பெரிய அளவில் இயக்குனராக பரிணமிக்கும் படைப்பாக இது இருக்கும். Blacksheep உடைய பல புனைகதை மற்றும் புனைகதை அல்லாத தொடர்களில் குறும்புத்தனம் மற்றும் அசத்தலான நடிப்பு மூலம், லட்சக்கணக்கான டிஜிட்டல் பார்வையாளர்கள் மத்தியில், ஏற்கனவே பிரபலமாக இருந்த சேட்டை ஷெரிப் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.

‘கன்னிராசி’ என்பது ஒரு வேடிக்கை நிறைந்த வலைத் தொடராகும், இது திருப்பங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட தொடர். சேட்டை ஷெரிப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் அமேசான் பிரைம் ஸ்டாண்டப் காமெடி புகழ் அபிஷேக் குமார், ஸ்வேதா, ஷாம்னி, பதின் குமார், அருண் கார்த்தி, குட்டி மூஞ்சி விவேக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த கதை நாயகன் கிருஷ்ணாவை (சேட்டை ஷெரீப்) சுற்றி சுழல்கிறது, ஒரு நல்ல வேலையுடன் கச்சிதமான வாழ்க்கையை வாழவேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறாமல் இருக்கிறது. பின்னர் அவரது வாழ்கை Mr. X என்ற ஒருவரை சந்தித்த பிறகு, அவனது கனவு வேலை அவனுக்கு கிடைக்கிறது, அதிலிருந்து அவன் வாழ்கை சிறப்பானதாக மாறுகிறது. கிருஷ்ணா எப்படி அவனது கனவு வேலையை அடைந்தான்?, Mr. X யார்?, இது தான் கன்னிராசி வலைதொடர், இது மொத்தம் 10 எபிசோட்களை கொண்ட தொடராக உருவாகிறது .

இத்தொடர் ஆகஸ்ட் 2022 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, நேற்று மாலை படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான முறையில் பூஜையுடன், இத்தொடரின் படப்பிடிப்பு தொடங்கியது.

படத்தின் தொழில்நுட்பக் குழு:-
நவநீத கிருஷ்ணன் (இணை இயக்குனர்), ஷஷாங்க், மகிமை, நித்யா, லோகேஷ்வரி( உதவி இயக்குனர்கள்). சரவணன் & நர்மதா (எழுத்தாளர்கள்), ஃப்ரெட்ரிக் விஜய் (ஒளிப்பதிவு), டார்வின் அஜய் (கேமரா அசிஸ்டண்ட்), பிரதீப் (கலை இயக்கம்), ஹரி ( SFX), நிசாம் (DI), அர்சத், இர்ஷத்(டிசைன்ஸ்), அசார்(நடனம்), நரேஷ்-கிஷோர்(எக்ஸிகியூடிவ் புரடியூசர்).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here