விஜய் சேதுபதி – நயன்தாரா – சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி சமீபத்தில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்ற படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்.’

இந்த படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் மே 27-ம் தேதி பிரத்யேகமாக வெளியிடுகிறது !

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தமிழ் ரசிகர்களுக்கு தொடர்ந்து சிறந்த கதைகள் மற்றும் ஒரிஜினல் திரைப்படங்களை வழங்குவதன் மூலம் தமிழகத்தில் சிறந்த ஓடிடி தளமாக புகழ் பெற்று வருகிறது. அதன் சமீபத்திய வெளியீடான ‘டாணாக்காரன்’ விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேயும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

சென்டிமென்ட், வேடிக்கை, காதல் மற்றும் சார்ட் பஸ்டர் பாடல்கள் என அனைத்து அம்சங்களும் அடங்கிய ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ரிலீஸுக்கு முந்தைய கட்டத்திலேயே ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியதோடு, பாக்ஸ் ஆபீஸிலும் சிறந்த வெற்றியைப் பெற்றது.

இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் இத்திரைப்படம் சிறந்த காட்சி மற்றும் ஆடியோ அம்சங்களுடன் பார்வையாளர்களுக்கு வீட்டிலேயே திரையரங்கு அனுபவத்தை தரும்.

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள, மிகச்சிறந்த பொழுதுபோக்கு படைப்பான ‘O2’ திரைப்படம் விரைவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  தளத்தில் வெளியாகுமென்று அறிவித்துள்ளது இன்னொரு முக்கியச் செய்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here