தெலுங்கு திரையுலகில் பல வெற்றிகளைத் தந்த பிரபலங்கள் இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, நடிகர் உஸ்தாத் ராம் பொத்தினேனி மற்றும் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி. இந்த மூவர் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு தற்காலிகமாக BoyapatiRAPO என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் வெளிவந்ததிலிருந்தே ரசிகர்கள் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும்படி, மிகப்பெரும் பட்ஜெட்டில் தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்போடு உருவாகியுள்ள BoyapatiRAPO தசாரா பண்டிகை கொண்டாட்டமாக அக்டோபர் 5 வெளியாவதாக அறிவிப்பு வந்துள்ளது. அதையடுத்து ரசிகர்கள் மிகவும் உற்சாகமாகியிருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் மற்றும் நடிகர் இருவரையும் பரவசப்படுத்தும் மாஸ் அம்சங்கள் நிறைந்த ஒரு அருமையான கதையுடன் வந்திருக்கிறார் போயபத்தி ஸ்ரீனு. பிரபல தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி Srinivasaa Silver Screens சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

