டாக்டர் அனிதா ரமேஷ் ஒருங்கிணைத்து நடத்திய மூன்று நாள் கருத்தரங்கு! கேன்சருக்கான புதிய சிகிச்சைகள், செயல் திட்டங்கள் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள்…

டாக்டர் அனிதா ரமேஷ் (CEO and Managing Trustee) நிறுவி நடத்திவரும் பொதுநலத் தொண்டமைப்பு by Freedom From Cancer Relief and Research Foundation. அவரது முயற்சியால் கேன்சர் சிகிச்சையை மையப்படுத்தி மூன்று நாள் கருத்தரங்கு (முதல் மற்றும் இறுதி நாள் நிகழ்வுகள் Virtual Meeting முறையிலும் ஒரு நாள் நிகழ்வு மட்டும் Physical Meeting முறையிலும்) நடந்தேறியது.

இந்த நிகழ்வில் இந்தியா முழுவதிலுமிருந்து 75க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்று கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொண்டனர்!

கேன்சர் பற்றிய தற்போதைய சிகிச்சை நிலவரம், சிகிச்சை முறையில் புதிய செயல் திட்டங்கள், மருந்து வகையறாக்கள், அவற்றின் விலை உள்ளிட்ட பல விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.

டாக்டர் அனிதா ரமேஷ்

வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படும் மருந்து வகைகளின் விலை நிலவரம் அச்சுறுத்துவதாக இருக்க, நம் நாட்டிலேயே இம்மருந்துகளை தயாரித்து விற்பனை செய்வது பற்றியும் விவாத மேடையில் கலந்தாலோசிக்கப்பட்டன!

கேன்சர் பாதிப்புக்கு ஆளானவர்களைப் பராமரிக்கும் முறைகள் பற்றியும் விவாதங்கள் நடந்தேறின.

மூன்று நாட்கள் நிகழ்வுகளையும் டாக்டர் அனிதா ரமேஷ் ஒருங்கிணைத்து, நெறிப்படுத்தி நடத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here