‘மீண்டும்’ படம் சிட்டிசன் போல் வெற்றிப் படமாக அமையும்! -சரவணன் சுப்பையா இயக்கியிருக்கும் ‘மீண்டும்’ பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி வாழ்த்து

ஹீரோ சினிமாஸ். சி.மணிகண்டன் வழங்க, கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் மீண்டும். இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி  சரவணன் சுப்பையா இயக்கி உள்ளார். இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப்படமான  சிட்டிசன் படத்தை இயக்கியவர்.

மீண்டும் படத்தில் கதிரவன் ஜோடியாக அனகா நடித்திருக்கிறார். இவர் டிக்கிலோனா, நட்பே துணை படங்களில் நடித்தவர்.  பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன்,  அபிதா செட்டி,  யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர், கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளார். நரேன் பாலகுமாரன் இசை அமைத்திருக்கிறார். சீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது எடிட்டிங் செய்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்திருக்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைத்திருக்கிறார்.  நடனத்தை ஐ ராதிகா அமைத்துள்ளார். பி.ஆர். ஒ டைமண்ட் பாபு. விஜய் நடித்த புலி படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் மீண்டும் படத்தை வர்த்தகம் செய்துள்ளார்..  தமிழகமெங்கும், காமதேனு பிலிம்ஸ் சார்பாக பாலாஜி விநியோகிக்கிறார்.

இரண்டு தந்தை, ஒரு பெண் ஒரு குழந்தை என்ற மாறுபட்ட கதையம்சமுள்ள இப்படத்தில் கடற்படையினரிடம் சிக்கி தமிழ் மீனவர்கள்படும் சித்ரவதையை தத்ரூபமாக்கி படமாக்கி உள்ளனர். இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியான் தாக்குதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கின்றனர்.

பட கதாநாயகன் கதிரவன் இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து  நடித்துள்ளார். இதற்காக ஆறு நாட்கள் நிர்வாணமாக சித்ரவதை செய்யப்படும் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,

மீண்டும் படத்தின் டிரைலர் வெளியீடு  மற்றும் பாடல்கள் முன்னோட்டம் இன்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி,  பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திரைப்பட இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு முன்னிலை வகித்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, சினிமாவில் நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது கங்கா கவுரி படத்தில் நான் நடித்தபோது எனக்கு தெரிந்தது. வேதனை படணும் என்று இயக்குனர் சொன்னார். அந்த ஒரு காட்சியில் நான் நடிப்பதற்கு மூன்றரை மணி நேரம் ஆனது. அதற்கு பிறகு  தற்போது ஆலம்பனா படத்தில் இப்போது நடித்திருக்கிறேன்.

சரவணன் சுப்பையா இயக்கிய சிட்டிசன் படத்தில் அஜீத்துக்கு அப்படியொரு கிளைமாக்ஸ் காட்சி வைத்திருப்பார். மாபெரும் நடிகராக அந்த படம் அஜீத்தை மாற்றும் அளவுக்கு சரவணன் சுப்பையா அமைத்திருப்பார். அவருக்கு இப்படம்  சிட்டிசன் போல் மீண்டும் ஒரு வெற்றி படமாக அமையும். இப்பட கதாநாயகன் கதிரவன் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள். குடும்ப கதையம்சம், வெளிநாட்டு தரத்துடன் இணைந்து படத்தை கொடுத்திருக்கிறார் சரவணன் சுப்பையா. இசையும் மிக அற்புதமாக தந்திருக்கிறார் இசை அமைப்பாளர். .கலைப் படைப்பு நம் வாழ்க்கையில் ஒரு நிலையாவது மாற்ற வேண்டும். அதுதான் சிறந்த கலைப் படைப்பு. அதுபோன்ற படத்தை இயக்குனர் சரவணன் சுப்பையா மீண்டும் மீண்டும் தரவேண்டும் இப்படம் மக்கள் மீண்டும் பார்க்கும் வெற்றி படமாக அமையும்.

இயக்குனர் சரவணன் சுப்பையா, இந்த இடத்துக்கு என்னை அழைத்து வந்த தயாரிப்பாளர் மணிகண்டனுக்கு நன்றி அவர் இல்லாவிட்டால் இப்படியொரு வாழ்க்கை கிடைத்திருக்காது. மிகப்பெரிய அர்ப்பணிப்பை நடிப்பில் அவர் கொடுத்திருக்கிறார். எனது இரண்டு கண்களாக ஒளிப்பதிவாளர்  மற்றும் இசையமைப்பாளர். அவ்வளவு உழைப்பு கொடுத்திருக்கிறார்கள்.  பின்னணி இசை ஆங்கிலப் பட பாணியில் இருந்தாலும் முழுக்க முழுக்க இந்திய இசை தான் அமைத்திருக்கிறார்.

திண்டுக்கல் லியோனி எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பவர். நீ சிறந்த சிந்தனையாளன். இன்னொரு சிட்டிசன் கொடு என்றார். சரி என்றேன். மிகவும் எளிமையானவர். அதேபோல் எஸ் ஏ சி, பேரரசு, ரவிமரியா வந்திருக்கிறார்கள். ஸ்டான்லி, கேபிள் சங்கர், சுபா தர்ஷினி, தேன்மொழி இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் அற்புதமான பாடல் வரிகளை வைரமுத்து எழுதி என்னை ஊக்குவித்தார். இந்த படத்தை பார்த்து என்னை கைதூக்கி விடுங்கள் வெற்றி பெற்றால் மிக நல்ல படங்களை தொடர்ந்து தருவேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here