நடிகர் ஷர்வா மற்றும் ஹிட் இயக்குநர் சம்பத் நந்தி இணையும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘Sharwa38 போகி’ என பெயரிடப்பட்டுள்ளது. 1960 களின் பரபரப்பான பின்னணியில் அதிரடி ஆக்சனுடன், விறுவிறுப்பும் உணர்ச்சியும் நிரம்பிய ஓர் புதிய அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது. இந்த படம் குறித்த ஃபர்ஸ்ட் ஸ்பார்க் எனப் பெயரிட்டப்பட்ட அசத்தல் அறிமுக வீடியோ வெளியாகி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஃபர்ஸ்ட் ஸ்பார்க் வீடியோ, 1960களின் வட தெலுங்கானா, மகாராஷ்டிரா பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தக்கதையின் மையத்தை மிக வித்தியாசமாக விவரிக்கிறது. இயக்குநர் சம்பத் நந்தி வித்தியாசமான முறையில் இந்த வீடியோவை உருவாக்கியுள்ளார். ஷர்வா இதுவரை இல்லாத மிரட்டலான தோற்றத்தில், காட்சியளிக்கிறார்.
பழையதை எரித்து புதியதை துவங்கியது தீயின் எழுச்சியை குறிக்கும் தீபாவளி நன்நாளான போகியின் உணர்வுகளை இந்த வீடியோ வழங்குகிறது.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் டிம்பிள் ஹயாத்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படம் இந்திய திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் கிரண் குமார் மன்னே ஆறு மாதங்கள் உழைத்து 20 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கிய பிரமாண்ட செட்டில் தொடங்கியுள்ளது.


