திருமணத்திற்கு பின் மனைவியோடு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி!

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த ‘டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்திக்கும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் கடந்த செப்டம்பர் ஐந்தாம் தேதி ஈரோட்டில் திருமணம் இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்திற்குப் பின் சிபி சக்கரவர்த்தியும் அவருடைய மனைவி ஸ்ரீ வர்ஷினி சிபியும் இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

‘டான்’ படத்திற்கு பத்திரிகையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த சிபி, அடுத்த படத்திற்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here