கணிதப் புதிர்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘கோப்ரா’ படத்தினை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் ரசிகர்களை சந்தித்த கோப்ரா படக்குழுவினர் அடுத்ததாக மலையாள தேசத்தின் மாநகரமான கொச்சிக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு பிரமாண்டமான, மலைக்க வைக்கும் விதத்திலான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து சீயான் விக்ரம், நடிகர் ரோஷன் மேத்யூ, நடிகைகள் மியா ஜார்ஜ், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அதைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள பிரபலமான ஜெயின் கல்லூரி வளாகத்தில் ‘கோப்ரா’ படக் குழுவினர், மாணவ மாணவிகளை சந்தித்தனர். அவர்களின் கேள்விகளுக்கு படக்குழுவினர் பதிலளித்து உற்சாகப்படுத்தினர்.
சீயான் விக்ரம் தலைமையிலான பட குழுவினரின் தமிழக பயணத்தை போல், கேரள பயணமும் எதிர்பார்த்ததை விட கூடுதலான வெற்றி பெற்றதால் ‘கோப்ரா’ பட குழு உற்சாகமடைந்திருக்கிறது.
‘கோப்ரா’ படம் பற்றி…
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில் எஸ். லலித்குமார் தயாரித்து, அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ‘சீயான்’ விக்ரம், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.