இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே
இருந்திருக்கின்றன.
அந்த வரிசையில் ஊர்வசி, தினேஷ், மாறன் நடிப்பில் வரும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் ‘ஜெ பேபி.’ இந்த படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிடுகிறது.
சமீபத்தில் திரைத்துறையினருக்காக இந்த படத்தின் சிறப்புக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தை பார்த்த அனைவரும் படக்குழுவினரையும் படத்தின் இயக்குநர் சுரேஷ் மாரி, படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் சுரேஷ் மாரி பேசும்போது, ”இது இது எல்லோருக்குமான படம்; குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். படம் பார்க்க தியேட்டர் வருபவர்கள் அவசியம் தங்களது அம்மாக்களையும் அழைத்து வாருங்கள்” என்றார்.