ரசிகர்களின் வரவேற்பு பிரமாண்டம்! ‘கோப்ரா’ குழுவின் பெங்களூரு பயணமும் சக்ஸஸ்!

‘கோப்ரா’ படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்துவதற்காக பட நாயகன் சீயான் விக்ரம் தலைமையிலான குழுவினர், பெங்களூரூக்கு சென்றனர். அவர்களுக்கு பிரமாண்டமான முறையில் ரசிகர்கள் திரண்டு வரவேற்பளித்தனர்.

தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் படங்களின் வெளியீட்டிற்கு முன்னர் அப்படக் குழுவினர், ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களின் அன்பை பகிர்ந்து கொள்வதுடன், படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிவித்து, படத்தை திரையரங்குகளில் வருகை தந்து காண செய்வதற்கான ‘ முதல் நாள் முதல் காட்சி உத்தி’யை மேற்கொண்டு வருகிறார்கள். திருச்சி, மதுரை, கோவை, சென்னை, கொச்சி ஆகிய இடங்களுக்கு பயணித்த ‘கோப்ரா’ பட குழுவினர், இதன் தொடர்ச்சியாக பெங்களூரூக்கும் சென்றனர்.

பெங்களூரூவிலுள்ள நெக்ஸஸ் மால் எனும் வணிக வளாகத்தில் நடைபெற்ற ரசிகர்களுடனான விழாவில் சீயான் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். கட்டுக்கடங்காத அளவிற்கு திரண்ட ரசிகர்களிடம் சீயான் விக்ரம், ‘கோப்ரா’ படத்தை பற்றி விவரித்து பேசினார். அதன் பிறகு அவர்கள் எழுப்பிய வினாவிற்கும் பதிலளித்தார். அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது.

திட்டமிட்டபடி பெங்களூரூவில் ரசிகர்களை சந்தித்த ‘கோப்ரா’ பட குழுவினர், அடுத்த கட்டமாக ஹைதராபாத்திற்கு பயணத்திருக்கிறார்கள்.
‘கோப்ரா’ படம் பற்றி…

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில் எஸ். லலித்குமார் தயாரித்து, அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ‘சீயான்’ விக்ரம், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here