ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் ‘சர்வம் தாளமயம்’ பிளாக் பஸ்டர் திரைப்படம்! வரும் ஞாயிறன்று கலர்ஸ் தமிழில்… 

வார இறுதி நாட்களில் மக்களை மகிழ்விக்கும் வகையில்  கலர்ஸ் தமிழ், ஜி.வி பிரகாஷ் நடிப்பில் பிளாக்பஸ்டர் திரைப்படமான சர்வம் தாளமயம் திரைப்படத்தை வரும் நவம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பவுள்ளது.

படம் பற்றி…

ஒரு மிருதங்கப் இசை பிரமாண்டத்தின் கண்கவர் பயணத்தை  பற்றிய இந்த திரைக்கதையில் ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  ராஜீவ் மேனன் இயக்கும் இப்படத்தில் இளங்கோ குமரவேல், அபர்ணா பாலமுரளி, வினீத் மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.  இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மானின்  பாடல்கள் இப்படத்தில் அந்தந்த  காட்சியின்  அனுபவத்தை  உயர்த்தி நிற்கிறது.

முதலில், பீட்டர் ( பிரகாஷ் குமார்)  தனது தந்தையின் தொழிலைப் பற்றி லேசாக நிராகரிக்கிறார்.  அவருக்கு அந்த உலகத்தைப் பற்றி அதிகம் ஆர்வம் இல்லாமையால் அவர் தனது சொந்த ஆசைகளில் ஈடுபடும் கவலையற்ற நபராகத் திகழ்கிறார். ஆரம்ப காலத்தில் பீட்டருக்கு சிறு தயக்கம் இருந்தபோதிலும், அவர் ஒரு பிரபல மிருதங்க கலைஞர் வேம்பு ஐயரை (நெடுமுடி வேணு) சந்திக்கிறார் மற்றும் அவரது திறமைகளில் மயங்கி அவருடைய சீடராக மாற விரும்புகிறார். அதற்கு இணையாக, ஐயரின் உதவியாளராக இருக்கும் மணியுடன் (வினீத்) போட்டியை உருவாக்குகிறார்.  மெல்லிசை மூலம் பீட்டர் எப்படி தனது இசை பயனத்தில் சாதனை  அடைகிறார் மற்றும் அந்த  பயணத்தில் என்னென்ன  தடைகளை எதிர்கொள்கிறார் என்பது படத்தின் மீதி கதையின் முடிவு. நவம்பர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் இப்படத்தில் உங்கள் இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்பும் ஒரு இனிமையான கதையைக் காண கலர்ஸ் தமிழை பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here