Samco Mutual Fund introduces a differentiated ELSS Tax Saver Fund that shall predominantly invest in Mid and small cap companies.     

சாம்கோ ELSS டேக்ஸ் சேவர் ஃபண்டு என்பது, சொத்து உருவாக்கத்திற்கான ஒரு கிளாசிக் வழிமுறையான ஒரு ELSS -ல் மூன்று ஆண்டுகளுக்கு கட்டாயமான லாக்கிங் காலஅளவுடன் திறன்மிக்க நடுத்தர மூலதனம் மற்றும் சிறிய மூலதனம் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டமாகும்.

எதிர்காலத்தில் சொத்து உருவாக்குனர்களாக உருவாவதற்கு மிக அதிக சாத்தியத்திறனைக் கொண்டிருக்கின்ற, அடிப்படையில் வலுவான பிசினஸ் நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு உதவ, தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்படும் ஒரு பிரத்யேக செயல்உத்தியான ஹெக்ஸாஷீல்டு ஃபிரேம்ஒர்க் என்பதனை சாம்கோ ELSS டேக்ஸ் சேவர் ஃபண்டு பயன்படுத்துகிறது. அதிக தரம் வாய்ந்த, திறன்மிக்க, முதலீடு செய்யத்தக்க பங்குகளை பல நிறுவனப் பங்குகளிலிருந்து பிரித்தெடுக்க இது உதவுகிறது. முதலீடு செய்யத்தக்க இந்த உலகிலிருந்து நிறுவனங்களை, இந்த ஃபண்டு மேலாண்மைக் குழு பகுப்பாய்வு செய்து, செய்யப்படும் முதலீட்டின் மீது அதிக ஆதாயம் தரக்கூடிய வளர்ச்சியை இலக்காக கொண்டு பயணிக்கின்ற பிசினஸ் நிறுவனங்களின் தொகுப்பை கட்டமைக்கும்.

மூன்று ஆண்டுகள் சராசரி ரோலிங் ரிட்டன்ஸ் அடிப்படையில் நிஃப்டி மிட்ஸ்மால்கேப் 400 இன்டெக்ஸ், 2005-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து நிஃப்டி 500 இன்டெக்ஸ் உடன் 8% அதிக ரிட்டன்ஸை / ஆதாயத்தை தந்திருக்கிறது. (பொறுப்புத்துறப்பு: கடந்தகால செயல்பாடு எதிர்காலத்திலும் நீடிக்கலாம் அல்லது நீடிக்காமலும் போகலாம். ஒரு அட்டவணையின் ஆதாயங்கள் இவை என்பதையும் மற்றும் எந்தவொரு குறிப்பிட்ட சேர்ந்தவை அல்ல என்பதையும் தயவுசெய்து கவனத்தில் கொள்க) நடுத்தர மூலதன மற்றும் சிறு மூலதன நிறுவனப் பங்குகளை கொண்டிருப்பதில் உள்ள ஏற்றஇறக்க நிலையும், ஒரு ஆண்டு வைத்திருக்கும் காலஅளவுடன் ஒப்பிடுகையில், மூன்று ஆண்டுகள் என்ற நீண்ட காலஅளவின்போது கணிசமாக சரிசெய்யப்பட்டுவிடும். ஆகவே, குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு கட்டாயமாக பங்கு முதலீட்டைக் கொண்டிருப்பதன் வழியாக நடுத்தர மற்றும் சிறிய மூலதன பிசினஸ் நிறுவனங்களில் முதலீடு செய்யும் இத்தகைய ஃபண்டில் முதலீடு செய்வதன் வழியாக இடரை சரிகட்டி, அதிகஅளவு ஆதாயத்தை ஒரு முதலீட்டாளரால் உருவாக்க முடியும்.

நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறுவனங்கள் மோசமான தரத்திலான பிசினஸ்கள் என்ற தவறான கருத்து அவைகளின் அளவின் காரணமாக தொழில்துறையில் நிலவுகிறது. யதார்த்தத்தில் இந்த கருத்துக்கு மாறான, இந்த பிசினஸ் நிறுவனங்களுள் சில அவைகள் இயங்கும் அந்தந்த வகையினங்களில் தலைமைத்துவம் வகிக்கின்றன ; சிறிய அளவில் அவைகள் இருந்தபோதிலும் கூட, வலுவான வருவாய் வளர்ச்சியையும், லாபத்தையும் மற்றும் உயர் விலை நிர்ணயம் செய்யும் சக்தியையும் கொண்டிருக்கின்றன. ஒரு நடுத்தர மூலதன பங்கு அதன் வாழ்நாள் காலத்தில் இரு விளைவுகளை எதிர்கொள்ளக்கூடும் – அதாவது, ஒரு மிட்-கேப், ஸ்மால்-கேப்பாக மாறக்கூடும். எ.கா. சொத்தை குறைத்து அளிப்பதாக அல்லது ஒரு மிட்-கேப் பங்கு லார்ஜ் கேப் பங்காக அதாவது, சொத்து உருவாக்குனராக மாறக்கூடும். ஆகவே, இந்த பிசினஸ்களின் போக்குகளை புரிந்துகொள்வது அத்தியாவசியமானது.

நடுத்தர மற்றும் சிறிய மூலதன பங்குகளில் சாம்கோ ELSS டேக்ஸ் சேவர் ஃபண்டு பிரதானமாக முதலீடு செய்யும்
இந்தியாவில் பெரும்பாலான ELSS ஃபண்டுகள், பெரிய மூலதன நிறுவனப் பங்குகளில் பெரும்பான்மையாக முதலீடு செய்கின்றன மற்றும் அந்நிறுவனங்களது முதன்மையான தொகுப்பில் வழக்கமாகவே வெகுசில நிறுவனப் பங்குகளே அமைந்திருக்கின்றன. இதன் காரணமாக, ஒரு ஃபண்டிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்ப்பது ஒரு முதலீட்டாளருக்கு மிகச்சிரமமானதாக இருக்கக்கூடும். அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள பங்குகளைக் கொண்ட நடுத்தர மற்றும் சிறு மூலதன பங்குகளில் அதிக முதலீடு செய்வதன் காரணமாக, சாம்கோ டேக்ஸ் சேவர் ஃபண்டு தனித்துவமானது; அதிக ஆதாயப்பலனை வழங்கும் சாத்தியத்திறனைக் கொண்டிருப்பதோடு, மூன்று ஆண்டுகள் என்ற கட்டாய லாக் இன் காலஅளவின் காரணமாக அதிகமான ஏற்ற, இறக்க பிரச்சனையும் சரிசெய்யப்பட்டு விடும்.
சாம்கோ மியூச்சுவல் ஃபண்டு, அதன் ELSS டேக்ஸ் சேவர் ஃபண்டின் அன்றாட பங்கு அளவை அதன் வலைதளத்தில் ஒவ்வொரு நாளும் வெளியிடும்.

சாம்கோ அசெட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் -ன் தலைமை முதலீட்டு அதிகாரி திரு. உமேஷ்குமார் மேத்தா இதுபற்றி கூறியதாவது: “இன்று நீங்கள் முதலீடு செய்யும் லார்ஜ்-கேப் பங்குகள், கடந்தகாலத்தில் ஒரு நேரத்தில் மிட்-கேப்ஸ்களாக இருந்தவை. நடுத்தர அளவிலிருந்து பெரிய மூலதன பங்காக மாறும் உருமாற்றமானது, ஒரு முதலீட்டாளருக்கு மிகப்பெரிய அளவில் சொத்தை உருவாக்கியிருக்கும். சாம்கோ ELSS டேக்ஸ் சேவர் ஃபண்டின் மூலம் பிரிவு 80C -ன் கீழ் வருமான வரி சேமிப்பின் பலனை ஒரு முதலீட்டாளர் பெறுமாறு நாங்கள் ஏதுவாக்குகிறோம்; அதே நேரத்தில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் காலஅளவிற்கு திறம்பட வளர்ந்து வரும் நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறுவனங்களில் முதலீட்டை செய்கிறோம். அந்தந்த துறைகளில் தலைமைவகிக்கும் நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகளின் வழியாக இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றின் ஒரு அங்கமாக, ஒரு முதலீட்டாளர் உருவெடுக்க ஏதுவாக்குவதே இத்திட்டத்தின் பின்புல நோக்கமாகும். ஏனெனில், இந்த நடுத்தர – சிறிய நிறுவனங்கள், நமது நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்கும் திறனுள்ளவையாக மாறக்கூடும்.”
“வரலாற்று ரீதியாக, 3 ஆண்டுகள் சராசரி ரோலிங் ரிட்டன் அடிப்படையில் நிஃப்டி 500 TRI உடன் ஒப்பிடுகையில், நிஃப்டி மிட்ஸ்மால்கேப் 400 TRI ~8% என்ற ஆதாயலப்பலனை உருவாக்கியிருக்கிறது. 3 ஆண்டுகள் லாக்-இன் என்ற அம்சத்துடன் நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறுவனங்களில் செய்யப்படும் பங்கு முதலீடு, இடரை சரிகட்டி, அதிக ஆதாயத்தை உருவாக்குகின்ற ஒரு வலுவான கலவை செயல்பாடாக இருக்கும்,” என்று திரு. உமேஷ் மேலும் விளக்கமளித்தார்.
சாம்கோ குழுமத்தின் தென் மண்டல தலைவர் திரு. எஸ். அனந்தராமன் கூறியதாவது: “சில்லரை முதலீட்டாளர்கள் திறனதிகாரம் பெறுவதற்கு சாம்கோ மியூச்சுவல் ஃபண்டு, தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அவர்களது முதலீட்டுப் பயணத்தில் விவேகமான முடிவுகளை செய்ய வகை செய்யும் வகையில் சிறப்பான தீர்வுகளை வழங்கி வருகிறது. நன்கு செயல்படக்கூடிய புத்தாக்கமான திட்டங்களை உருவாக்கி வழங்குவது என்ற சாம்கோவின் குறிக்கோளுக்கு இணக்கமான ELSS ஃபண்டு, அதிக சாத்தியத்திறன் திறன் கொண்ட நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறுவனங்களில் பிரதானமாக முதலீட்டை மேற்கொள்ளும்.”
பொறுப்புத்துறப்பு: MUTUAL FUND INVESTMENTS ARE SUBJECT TO MARKET RISKS, READ ALL SCHEME RELATED DOCUMENTS CAREFULLY.
பொறுப்புத்துறப்பு: கடந்தகால செயல்பாடு எதிர்காலத்திலும் தொடர்ந்து நீடிக்கலாம் அல்லது நீடிக்காமல் போகலாம்
சாம்கோ அசெட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட்
சாம்கோ அசெட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்பது, 1003-A, 10வது தளம், நமான் மிட்டவுன், சேனாபதி பபட் மார்க், பிரபாதேவி (W), மும்பை 4000013 என்பதில் தனது பதிவு அலுவலகத்தையும் மற்றும் எண். MF-077/21/03 என்ற செபி பதிவு எண்ணையும் கொண்டிருக்கும் சாம்கோ மியூச்சுவல் ஃபண்டின் அசெட் மேலாளராக செயல்படுகிறது. https://www.samcomf.com/ இந்தியாவில் 4000 பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் சுமார் 60000 முதலீட்டாளர்களை சாம்கோ கொண்டிருக்கிறது.
ஸ்பான்சர் பற்றிய விவரங்கள்: சாம்கோ செக்யூரிட்டிஸ் லிமிடெட் https://www.samco.in/என்பது, மும்பையில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் சொத்து – தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமாகும். டிஸ்கவுண்ட் புரோக்கிங் தொழில்துறையில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களுள் இதுவும் ஒன்று. அல்கோரிதங்கள், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, இந்திய முதலீட்டு சந்தைகளில் தீவிரமாக வர்த்தகம் அல்லது முதலீடு செய்யும் தனது வாடிக்கையாளர்களுக்கு கட்டுபடியாகக்கூடிய எளிமையான செலவில் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்குவது இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.
டிரஸ்டி நிறுவனம் பற்றிய விவரங்கள்: சாம்கோ டிரஸ்டி பிரைவேட் லிமிடெட் என்பது, 1003-A, 10வது தளம், நமான் மிட்டவுன், சேனாபதி பபட் மார்க், பிரபாதேவி (W), மும்பை 4000013 என்பதில் தனது பதிவு அலுவலகத்தைக் கொண்டிருக்கும் சாம்கோ மியூச்சுவல் ஃபண்டிற்கு டிரஸ்டியாக செயல்படுகிறது.
பொறுப்புத்துறப்பு: கடந்தகால செயல்பாடு, எதிர்கால ஆதாயப்பலனுக்கு ஒரு சுட்டிக்காட்டல் அம்சமாக இருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here