Home பொது நாட்டின் ஜிடிபி உயர மாணவர்கள் என்ன செய்யவேண்டும்? பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப்...

நாட்டின் ஜிடிபி உயர மாணவர்கள் என்ன செய்யவேண்டும்? பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி’யின் 12-வது பட்டமளிப்பு விழாவில் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர். எம். ரவிச்சந்திரன் சிறப்புரை

பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி தனது வளாகத்தில் இன்று (27.11.2022) 12-வது பட்டமளிப்பு விழாவை நடத்தியது.

இந்த நிகழ்வில்  44 பிஎச்.டி., 501 முதுகலை மற்றும் 1795 இளங்கலை உள்பட மொத்தம் 2340 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர். தர வரிசையில் இடம் பெற்றதற்காக 51 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இதில் 33 மாணவர்கள் இளங்கலை மற்றும் 18 மாணவர்கள் முதுகலை படித்தவர்கள்.

தொற்றுநோய் பரவி வரும் நிலையில், தமிழக அரசு விதித்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகளின்படி இன்றைய பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கட்டுப்பாடுகளின் அடிப்படையில் 578 மாணவர்கள் மட்டும் நேரில் பட்டம் பெற்றனர். மீதமுள்ள 1762 மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி வேந்தர் பிஎஸ்ஏ ஆரிப் புஹாரி ரஹ்மான், இணை வேந்தர் திரு. அப்துல் காதர் ஏ ரஹ்மான் புஹாரி, துணைவேந்தர் டாக்டர் ஏ.பீர் முகமது, பதிவாளர் டாக்டர். என். ராஜா ஹுசைன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். டாக்டர். எம். ரவிச்சந்திரன் (செயலாளர், புவி அறிவியல் அமைச்சகம் (எம்ஓஇஎஸ்), இந்திய அரசு, புது டெல்லி) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். அதையடுத்து அவர் வாழ்த்து தெரிவித்து பேசுகையில், “நாம் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத் தலைவராக, பாதையை கண்டுபிடிப்பவர்களாக இருக்க வேண்டும், பின்பற்றுபவர்களாக இருக்கக்கூடாது. இது நமது லட்சியமாகவும், கனவாகவும் இருக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் யோசனைகளை வெளிக்கொண்டுவர நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆற்றலுடனும், அர்ப்பணிப்புடனும் பங்களித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். புதுமையால் மட்டுமே உற்பத்தித் திறனை உயர்த்த முடியும். அதன் மூலம் நாட்டின் ஜிடிபியும் உயரும்” என்றார்.

வரவேற்பு உரை மற்றும் ஆண்டறிக்கையை வழங்கிய துணைவேந்தர் டாக்டர். ஏ.பீர் முகமது பேசுகையில், “2021-22 கல்வியாண்டு, நமது கிரகத்தின் நன்மைக்காக – மனிதனுக்கும் இயற்கைக்கும் – கல்வி மற்றும் அறிவை பயன்படுத்துவதற்கான புதிய வழிகளை ஆராய்வதற்கும், புதுமையான திட்டங்கள் மூலம் கல்வி நிறுவனங்கள், அதன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொண்ட ஒரு வெற்றிகரமான ஆண்டாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நாம் அடையும் முன்னேற்றம், நமது இலக்குகளை மறுபரிசீலனை செய்வதற்கும், வரம்பை உயர்த்துவதற்கும் நம்மை தூண்டுகிறது. இதனால் நாங்கள் மிக விரைவில் முதல் பத்து தரவரிசையில் நுழைவோம்” என்றார்.

நிகழ்வின் நிறைவாக, வெற்றி பெற்ற பட்டதாரிகளால் உறுதிமொழி எடுக்கப்பட்டது!

About B.S Abdur Rahman Crescent Institute of Science and Technology
B.S. Abdur Rahman Crescent Institute of Science and technology is a renowned Quality Leadership Institution located amidst the greenest spot of Chennai near Tambaram. The Institution has offered access to a wide range of academic opportunities – 57 programmes grouped under 12 different Schools, 32 Undergraduate Programmes, 25 Postgraduate programmes, and Ph.D. (in all the departments). Through its wide array of educational programmes and unique clubs to foster student development activities, the institution provides opportunities and experiences that build community and help students grow personally and professionally.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்