ஸ்டான்லி டூசி, பிரியங்கா சோப்ரா நடிப்பில் அடிதடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஸ்பை த்ரில்லர் ‘சீட்டடெல்’ இணைய தொடர் பிரைம் வீடியோவில் ஏப்ரல் 28 முதல்!

ஓடிடி தள ஆர்வலர்களால் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட அடிதடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஸ்பை த்ரில்லர் ‘சீட்டடெல்‘ தொடரின் பரபரப்பான இரண்டு எபிசோடுகள் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியிடப்பட்டு, மே 26 வரை ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய எபிசோடு பிரத்யேகமாக பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கிறது. அதனை அறிவிக்கும் ஃபர்ஸ்ட் லுக் காட்சிகளை பிரைம் வீடியோ வெளியிட்டது.

எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்களாக  ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO மற்றும் ஷோ ரன்னராக டேவிட் வெய்ல் ஆகியோர் இணைந்து, மிகுந்த பொருட்செலவில் இந்த உணர்ச்சி மிகுந்த படைப்பை தயாரித்திருக்கிறார்கள். இதில் ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா, ஜோனாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். உலகளவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சீட்டடெல் வெளியிடப்படுகிறது.

சீட்டடெல் பற்றி:

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, நிழல் உலகை ஆண்டு கொண்டிருந்த ஒரு வலிமை மிக்க அதிகாரக் குழுவான மாண்டிகோரை இயக்கிக் கொண்டிருந்தவர்களால் அனைத்து மக்களின் பாதுகாப்பையும், பத்திரத் தன்மையையும் நிலைநிறுத்துவதற்காக பணிக்கப்பட்ட சீட்டடெல் எனும் இந்த சுதந்திரமான உலகளாவிய உளவு நிறுவனமானது, அழிக்கப்பட்டது. சீட்டடெல் வீழ்ச்சியின் போது உயர்நிலை உளவுத் துறை அதிகாரிகளான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நதியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனாஸ்) இருவரும் மயிரிழையில் உயிர் தப்பினாலும் அவர்களின் கடந்த கால நினைவுகள் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டுவிட்டது.

அப்போதிருந்து தங்கள் கடந்த காலத்தை பற்றி எதுவும் அறியாதவர்களாக, புதிய அடையாளங்களோடு ஒரு புதிய வாழ்கைப் பயணத்தை மேற்கொண்டு   மறைந்தே வாழ்ந்து வந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் ஒரு நாள் இரவு, மேசனின் உடன்  பணியாற்றிய பணியாளர் பெர்னார்ட் ஆர்லிக் (ஸ்டான்லீ டுக்ஸி) ஒரு இக்கட்டான நிலையில் புதிய உலக அமைப்பு ஒன்றை நிறுவும் மாண்டிகோரின் முயற்சிகளை முறியடிக்க, மேசனின் உதவியை அவசரமாக வேண்டி, அவரைத் தேடி வருகிறார்.

மேசன் தன்னுடன்  பணிபுரிந்த பணியாளர் நதியாவையும் தேடிக் கண்டுபிடிக்கிறார். அதன் பிறகு இரகசியங்கள், பொய்கள், மற்றும் ஆபத்தான அதே சமயம் அழியாத கொழுந்துவிட்டு எரியும் காதல் உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட உறவுடனான தொடர்ந்த போராட்டத்தின் நடுவே மாண்டிகோரின் முயற்சிகளை தடுத்து நிறுத்தும் ஒரேயொரு பணியிலக்கை நோக்கி அந்த இரண்டு ஒற்றர்களும் உலகமெங்கும் சுற்றி வரச்செய்யும் அந்தப் பயணத்தைத்  தொடங்குகிறார்கள்.

கேன் ஆக ரிச்சர்ட் மேடன், நடித்திருக்கும் இந்தத் தொடரில் நதியா சிங்காக பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் , பெர்னார்ட் ஓர்லிக்காக ஸ்டான்லி டுசி, டாலியா ஆர்ச்சராக லெஸ்லி மான்வில்லே, கார்ட்டர் ஸ்பென்ஸாக ஓஸி இகிலே, அபே கன்ராய் ஆக ஆஷ்லே கம்மிங்ஸ்ஸும்வும்,  ஆண்டர்ஸ் சில்ஜே மற்றும் டாவிக் சில்ஜே ஆக ரோலண்ட் முல்லர், ஹென்ட்ரிக்ஸ் கான்ராய் ஆக கயோலின் ஸ்பிரிங்கால் ஆகியோரும் இன்னும் பலரும் நடித்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here