பிரபல இந்தி தொடர் பிசாசினி இப்போது தமிழில்! கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் 27 முதல்…

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தொடர்களை ஒளிபரப்பி கவனம் ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் மிகவும் பிரபல இந்தி தொடரான பிசாசினி தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழக பார்வையாளர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. கற்பனைக் கதையான இது பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும். இந்தத் தொடர் ராணி என்ற பெண்ணின் வாழ்க்கையை சுற்றி வருகிறது.

அவள் தன்னிடம் அசாதாரண சக்திகள் இருப்பதைக் கண்டுபிடித்து, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொண்டு செயல்படுகிறாள். அவ்வாறு செய்யும்போது அவள் வாழ்க்கையில் என்னென்ன சம்பவங்கள் நிகழ்கிறது என்பதே இந்த தொடரின் கதையாகும்.

இந்தத் தொடரில் பிரமிக்க வைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இதில் திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் நைரா பானர்ஜி, ஜியா சங்கர் மற்றும் ஹர்ஷ் ராஜ்புத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த தொடரை (மார்ச் 27-ம் தேதி தொடங்கி) திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்ப தொடங்கியுள்ளது.

இந்த தொடருடன் இந்த தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொடர்களான பொம்மி பி.ஏ.பி.எல் மற்றும் நாகினி ஆகிய தொடர்களும் ஒளிபரப்பாக உள்ளது. இதில் பொம்மி பி.ஏ.பி.எல். தொடரில் அவுரா பட்நாகர் படோனி, பிரவிஷ்த் மிஸ்ரா, ரிஷி குரானா, சந்தன் கே ஆனந்த், பிரனாலி ரத்தோட் ஆகியோர் நடித்துள்ள, இந்த தொடர் ஏப்ரல் 3ம் தேதி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. தேஜஸ்வி பிரகாஷ், சிம்பா நாக்பால், ஊர்வசி தோலாகியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாகினி தொடர் மார்ச் 27, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here