அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் ‘செங்களம்’ வெப் சீரிஸ் வெற்றிக் கொண்டாட்டம்!

கலையரசன், வாணிபோஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்து, எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் ZEE5 தளத்தில் சில தினங்கள் முன் வெளியான ‘செங்களம்’ இணையத் தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.தமிழின் முதல் அரசியல் சம்பந்தமான முழு நீள இணையத்தொடராக வெளியாகியுள்ள செங்களம், அரசியலின் கோர முகத்தையும், அரசியல்வாதிகளின் மறுபக்கத்தையும் படம்ப்பிடித்துக் காட்டியுள்ளது. இதுவரையிலான திரை வரலாற்றில் அரசியல்களம் எப்படி இருக்கும் அரசியலுக்குள் பதவிக்காக நிகழும் போட்டி, பொறாமை, துரோகம் என ஒரு முழு நீள அரசியல் களத்தை நெருக்கமாக அணுகிய வகையில் மிக முக்கிய படைப்பாக மாறியிருக்கிறது ‘செங்களம்.’ விமர்சகர்கள் மற்றும் ரசிர்களிடம் ஒரு சேர வரவேற்பை குவித்துள்ள இத்தொடர், வெளியானதிலிருந்தே, ZEE5 தளத்தில் பெரும் எண்ணிக்கையிலான பார்வைகளை குவித்து வெற்றி பெற்றுள்ளது.‘செங்களம்’ அரசியல் சம்பந்தமான தொடர் என்பதால் அதற்கான வெற்றியை படக்குழுவினர் வித்தியாசமாக கொண்டாட நினைத்தனர்.அதையடுத்து இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன், நடிகை ஷாலி நிவேகாஸ் மற்றும் நடிகர் டேனியல் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று பேரறிஞர் அண்ணா நினைவிடம், கலைஞர் கருணாநிதி நினைவிடம், புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் நினைவிடம், புரட்சித்தலைவி ஜெயலலிதா நினைவிடம் மற்றும் காமராஜர் நினைவிடத்திற்கு சென்று, மலர் தூவி மரியாதை செய்தனர்.

பின்னர் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான வீட்டு உபயோக பொருட்களை வழங்கி, இணையத் தொடரின் வெற்றியை கொண்டாடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here