Home சினிமா சின்னத்திரை நடிகர் சங்கம் – ஸ்ரீ லலிதாம்பிகா மருத்துவக் கல்லூரி நடத்திய மருத்துவ முகாம்! 500க்கும்...

சின்னத்திரை நடிகர் சங்கம் – ஸ்ரீ லலிதாம்பிகா மருத்துவக் கல்லூரி நடத்திய மருத்துவ முகாம்! 500க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.

‘சின்னத்திரை நடிகர் சங்கம்’ – ஸ்ரீ லலிதாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ கே ஆர் திருமண மண்டபத்தில் 9.7.2023 அன்று காலை முதல் மாலை வரை மருத்துவ முகாம் நடந்தது.

சின்னத்திரை நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் நடிகர் டி. சிவகுமார், நடிகை எலிசபெத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள்.

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் கலைமாமணி சிவன் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வை எம் ஜி ஆர் மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் இ ஆர் ஏ சி எஸ் அருண்குமார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஏசி சண்முகம் கலந்து கொண்டு சிறப்பித்தார். சின்னத்திரை கலைஞர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இலவச மருத்துவ ஆயுட்கால உறுப்பினர் கார்டுகளை வழங்கி வாழ்த்திப் பேசினார்.

மருத்துவ முகாமில் 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். சின்னத்திரை நடிகர் நடிகைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு 30க்கும் மேற்பட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

நிகழ்வை சின்னத்திரை நடிகர் சங்க செயலாளர் போஸ் வெங்கட் ஏற்பாடு செய்திருந்தார். பொருளாளர் ஜெயந்த் நன்றி தெரிவித்தார்.

கல்லூரி முதல்வர் துரை மணி, துணைத் தலைவர்கள் ராஜ்காந்த், பரத், இணைச் செயலாளர்கள் சதீஷ், சிவகவிதா, தினேஷ் ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் செயற்குழு உறுப்பினர்கள் பிர்லா, விஜய் ஆனந்த்,தேவ் ஆனந்த், கமலஹாசன், குகன், டி சிவகுமார், அரவிந்த், பவித்ரன், ஐஸ்வர், ரகுநாதன்,சாந்தி வில்லியம்ஸ், ஆர்த்தி, உஷா, எலிசபெத் ராஜ், கே பி கற்பகம், ரஞ்சனா, போண்டாமணி உட்பட நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர்.

நிர்வாகி மகாலிங்கம், கல்பனா, வாசவி, மற்றும் திரைப்பட மக்கள் தொடர்பாளர் கலைச்செல்வம் கடையம் ராஜு ஆகியோர் வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்