யோகிபாபு நடிக்க, ராதாமோகன் இயக்கும் ‘சட்னி – சாம்பார்’ வெப் சீரிஸ் படப்பிடிப்பு துவங்கியது! டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்காக தயாராகிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்காக ‘சட்னி – சாம்பார்’ வெப் சீரிஸை கடந்த ஜூலை 15 அன்று பூஜையுடன் துவங்கியது.

உணர்வுபூர்வமான படங்களை இயக்கிவருகிற ராதாமோகன் இந்த வெப் சீரிஸை இயக்குகிறார். ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிக்கிறது.

யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்க, ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா ஆகியோரும் நடிக்கவுள்ளார்கள். பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர் சுந்தர்ராஜன் இந்தத் சீரிஸில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார், இதில் இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகிய மூன்று குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.

பூஜையுடன் இரும்புத்திரை’, பூஜையுடன் சர்தார்’, பூஜையுடன் கைதி’, பூஜையுடன் மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த சீரிஸுக்கான வசனங்களை எழுதியுள்ளார்.

இந்த வெப்சீரிஸ் பற்றி யோகிபாபு பேசியபோது, “இந்த வெப்சீரிஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான அருமையான படைப்பாக இருக்கும்” என்றார்.

நடிகை வாணி போஜன் பேசியபோது, “டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மற்றொரு படைப்பில் இணைவது பெரும் மகிழ்ச்சி. யோகிபாபுவுடன் நடிப்பது இதுவே முதன்முறை. எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் ராதா மோகன் சார் இயக்கத்தில் பணிபுரியப் போகிறேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அட்டகாசமான சிரீஸாக இது இருக்கும்” என்றார்.

இயக்குநர் ராதாமோகன் பேசியபோது, வெப்சீரிஸின் படப்பிடிப்பை அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க முழுக்க காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும்” என்றார்.

உருவாக்கத்தில் உறுதுணை:-

பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றிய பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சூப்பர் சிங்கர் போட்டியில் வென்று புகழ் பெற்ற அஜீஷ் அசோக் இசையமைக்கிறார். ஜிஜேந்திரன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கே கதிர் கலை இயக்கம் செய்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here