இந்தியாவில் முன்னணி சாக்லேட், பிஸ்கெட் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான லோட்டே இந்தியா, அனைவரும் விரும்பும் காஃபி பைட் பிராண்டின் கீழ் புதிய அறிமுகத்துடன் தனது அடுத்தகட்ட வளர்ச்சி பயணத்தை துவங்கி உள்ளது. அந்த வரிசையில் தற்போது இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள காஃபி பைட் ரிச் சாக்லேட், புதுமையான காபி மற்றும் கிரீமி வெண்ணிலா உடன், முழுமையான காபி சுவை அனுபவத்தை வழங்குகிறது.
இது குறித்து லோட்டே இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மிலன் வாஹி கூறுகையில், தற்போது நாங்கள் அறிமுகம் செய்துள்ள காஃபி பைட் ரிச் சாக்லேட், எங்கள் பயணத்தில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது, இது நுகர்வோரின் மாறிவரும் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சாக்லேட்டிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நாங்கள் நம்புவதோடு, எங்களின் வருவாயும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும் இந்த புதிய தயாரிப்பு புதுமையான காபி மற்றும் கிரீமி வெண்ணிலா சுவையுடன், நுகர்வோரின் விருப்பங்களை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு இந்தியரும் விரும்பும் சாக்லேட்டாக மாறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றார்.
இந்த புதிய சாக்லேட் தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளது, இது சாக்லேட் சந்தையில் கடுமையான போட்டிக்கு மத்தியில் தனித்து நிற்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தனது பிராண்டின் பாரம்பரியத்தைப் பராமரிக்கும் வகையில், இந்த புதிய சாக்லேட்டை அசல் காஃபி பைட் சுவை மாறாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறந்த சுவை அனுபவத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இந்த சாக்லேட்டை இந்நிறுவனம் பலதரப்பட்ட மக்களிடம் பல்வேறு வயதினரிடம் பரிசோதித்துள்ளது. பாரி கன்பெக்ஷனரி நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்து லோட்டே நிறுவனம் காபி டோஃபி பிராண்ட் பிரிவில் முன்னோடியாக இருந்து வருகிறது, மேலும் காஃபி பைட்டில் பல ஆண்டுகளாக ஒரு சிறந்த பிராண்டாக இருந்து வருகிறது. இதன் தயாரிப்புகள் 1987–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இன்று வரை தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துள்ளது.
தவிர, பல்வேறு புதிய சுவைகள், புதிய பேக்கிங் வடிவங்களையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய அதே நேரத்தில் அதன் பெருமையை குறிக்கும் காபி சுவையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இந்தியாவில் உள்ள நுகர்வோர்களின் சாக்லேட் அனுபவத்தை மாற்றி அமைக்கும் வகையில் இந்நிறுவனம் தற்போது காஃபி பைட் ரிச் சாக்லேட்டை அறிமுகம் செய்துள்ளது. இது எங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான பயணம் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் நலனில் அக்கறை செலுத்துவதோடு, வளர்ந்து வரும் உணவு வர்த்தக பிரிவில் தனக்கென ஒரு இடத்தை லோட்டே இந்தியா நிறுவனம் தக்கவைத்துள்ளது என்பது பெருமிதமான செய்தி!