அடிதடி, வெட்டு குத்து என கேங்ஸ்டர் படங்களுக்கே உண்டான வன்முறை எதுவுமில்லாமல் ‘தாவுத்’ என்ற பெயரில் கேங்ஸ்டர் படம் ஒன்று உருவாகிறது.
பரோல், பெண்குயின், சேதுபதி உள்ளிட்ட படங்களிலும் அயலி, உடன்பால் உள்ளிட்ட வெப் சீரிஸ்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள லிங்கா காதநாயகனாக நடித்துள்ளார். சாரா ஆச்சர் இந்த படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
‘வத்திக்குச்சி’ திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன். அவரிடம் படம் பற்றி கேட்டபோது, ”யூஸ்வலான சேஸிங், ஃபைட் என வழக்கமான விசயங்கள் இல்லாத ஒரு கேங்ஸ்டர் படம் இது. புது டைப் காமெடி கலந்து ஒரு ஃபேமிலி பேக்கேஜாக உருவாக்கியிருக்கிறேன்.
இதுவரை யாரு திரையில் பார்த்திராத ஒரு புது அனுபவத்தை தரக்கூடியா கேங்ஸ்டர் படமாக இது இருக்கும், குறிப்பாக இன்றைய இளைஞர்களை கவரக்கூடிய வகையில் உருவாக்யுள்ளோம். விரைவில் வெள்ளித்திரையின் தாவுத்தை சந்திக்கலாம்” என்றார். என்றார்.
படத்தை ‘TURM புரொடக்ஷன் ஹவுஸ்’ எஸ் உமா மகேஸ்வரி தனது இரண்டாவது படைப்பாக மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளார். சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். அருண் பாரதி பாடல்களுக்கு ராக்கேஷ் அம்பிகாபதி இசையமைத்துள்ளார். ஆர் கே ஸ்ரீநாத் எடிட்டிங் செய்ய, கலை இயக்கத்தை ஜெய் முருகன் மேற்கொள்ள, ஸ்ரீக்ரிஷ் நடனம் அமைத்துள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை புவன் செல்வராஜ் கவனிக்கிறார்.
