‘டியூட்’ மூலம் பாடகரான பிரதீப் ரங்கநாதன்: திரையரங்குகளில் ஆடியோ – வீடியோ விஷூவல் ட்ரீட்டாக மாறப்போகும் ‘சிங்காரி.’

பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் எதிர்பார்ப்பு பலமடங்காகியுள்ளது. அவரது முந்தைய படங்களான ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களும் பெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

‘டியூட்’ படத்திற்கு சாய் அபயங்கரின் இசையும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சிங்காரி’ பாடலை நடிகர் பிரதீப் ரங்கநாதன் பாடியிருப்பதன் மூலம் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார். பாடல் வெளியான ஒரே இரவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதை அடுத்து ஆல் ரவுண்ட் எண்டர்டெயினர் என்பதை நிரூபித்துள்ளார் பிரதீப்.

சஞ்சய் செம்வியின் எனர்ஜிட்டிக்கான பாடல் வரிகளும் இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் கண்ணைக் கவரும் பாடல் உருவாக்கமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. திரையரங்குகளில் நிச்சயம் ஆடியோ- வீடியோ விஷூவல் ட்ரீட்டாக இந்தப் பாடல் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 அன்று உலகம் முழுவதும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

திரையரங்குகளில் நிச்சயமாய் ஆடியோ – வீடியோ விஷூவல் ட்ரீட்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here