ஷாருக்கான் அவரது மகன்கள் ஆர்யன் கான் மற்றும் ஆப்ராம் கான் முதன்முதலில் ஒன்றாக இணைந்து, டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொழுதுபோக்கு சித்திரமான Mufasa : The Lion King படத்தின் இந்தி பதிப்பிற்கு குரல் கொடுத்திருக்கிறார்கள்.
இயக்குனர் Barry Jenkins-இன் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொழுதுபோக்கு சித்திரம், இந்தியாவில் 20 டிசம்பர் 2024 அன்று, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
காட்டின் இறுதி ராஜா, முஃபாசா: லயன் கிங்கின் பாரம்பரியத்தை ஆராய்வதற்கான நேரம் இது. இதுவரை கண்டிராத அளவிற்கு நட்சத்திர நடிகர்களின் இணைப்பு அரங்கேறியுள்ளது. இப்படத்தின் கதாபாத்திரங்களை உயிர்ப்பிக்கும் விதத்தில், ஷாருக்கான் மற்றும் அவரது மகன்கள் ஆர்யன் கான் மற்றும் அப்ராம், ஆகியோர் தங்களது குரல் வளத்தை வாஞ்சையோடு வழங்கியுள்ளார்கள்.
2019 இன் லைவ்-ஆக்ஷன் படமான The Lion King என்ற பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, ஷாருக்கான் முஃபாஸாவாக மீண்டும் பவனி வருகிறார். பார்வையாளர்களை மீண்டும் காட்டு ராஜாவை காண அழைத்துச் செல்கிறார்.
இம்முறை, ஷாருக்கான் தவிர, அவரது மகன்கள் ஆர்யன் கான் சிம்மாவாகவும் , ஆபிராம் கான் இளைய முஸாபாவாகவும், தங்களது குரல் வளத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது!
கிங் கான் என அழைக்கப்படும் வசீகர சக்ரவர்த்தி, ஷாருக்கான், மற்றும் அவரது இரு மகன்களும் இதன் ஹிந்தி முன்னோட்டத்தின் வெளியீட்டில் முக்கிய பங்கேற்றிருப்பது அரியதோர் நிகழ்வு!
படம் பற்றி ஷாருக்கான் பேசுகையில் “முஃபாசா ஒரு ஒப்பு உயர்வில்லாத மரபு மற்றும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. காட்டின் ராஜா, முஃபாசா,, தனது ஞானத்தை அவரது மகன் சிம்பாவுக்கு வழங்குகிறார். நான் அவருடன் ஆழமாக தொடர்பு கொள்கிறேன் முஸாபா வின் இளமை காலம் தொட்டு காட்டு ராஜா வாக உருவாகி சாதனைகள் புரியும் காலம் வரை அந்த கதாபாத்திரத்தை குரல் வடிவாக வழங்கியது அருமையானதொரு அனுபவம் ! எனது மகன்களும் இப்பணியில் பங்கேற்றது மேலும் மெருகேற்றியது! டிஸ்னியுடன் இது எனக்கு ஒரு சிறப்பு ஒருங்கிணைப்பு!, குறிப்பாக என் மகன்கள் ஆர்யன் மற்றும் ஆப்ராம், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக உள்ளனர், இந்த அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக இருக்கிறது” என்றார்.
டிஸ்னியின் ஸ்டுடியோஸ் தலைவர் பிக்ரம் துகல் “உன்னதமான முஃபாசா ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்பதை விட, அவர் தொடர்ந்து செயல்படும் ஒரு அவதார நாயகனாக வலம் வருகிறார். தலைமுறைகள் பாராட்டும் கதைகளை உருவாக்கி ஊக்குவிக்கும் டிஸ்னி நிறுவனத்தின் புதியதொரு பிரம்மாண்டமான படைப்பு தான் , இப்படம். ஷாருக்கான் மற்றும் ஆர்யன் கானைத் தவிர வேறு யாரையும் எங்களால் கற்பனை செய்ய முடியவில்லை. Musafa உலகில் மற்றும் அவரது மகன்களும் இணைந்துள்ளது வெகு விஷேசமான ஒரு செயல்பாடு. கோடிக்கணக்கான இந்திய பார்வையாளர்களுக்கான சிறப்பான ஒரு முயற்சி இது” என்றார்.
படத்தின் இதர சிறப்பம்சங்கள்:
புதிய முறையில் ரசிகர்களுக்குப் பிடித்தமான கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டுதல் மற்றும் நேரடி நடவடிக்கை திரைப்படத் தயாரிப்பு நுட்பங்களை புகுத்துதல், ஃபோட்டோரியல் கம்ப்யூட்டர் உருவாக்கிய உன்னத படைப்பு.
இந்த படம் பற்றி கூடுதல் விவரங்களை அறிய:-
Insta – @disneyfilmsindia
X- @DisneyStudiosIN
YT – @WaltDisneyStudiosIndia