கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ‘பொன்னி C/O ராணி’, இரவு 8.30க்கு ‘கண்ணெதிரே தோன்றினாள்’ நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் இந்த தொடர்களை மையப்படுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் மெகா பரிசுப்போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியாக விடை அனுப்பி பரிசு வென்ற நேயர்களுக்கு, கலைஞர் தொலைக்காட்சியின் ‘தேடி வரும் தங்கம்’ வாகனம் மூலம் நேயர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று பரிசுகளை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறது.