சன்னி லியோன், பிரியாமணி நடிக்கும் ‘Quotation Gang’ படத்திற்கு மியூசிகல் ஐகான் ட்ரம்ஸ் சிவமணி இசையமைக்கவிருக்கிறார் என்பது இன்றைய பரபரப்பான செய்தி.
அந்த படம் பற்றிய கூடுதல் விவரங்கள்…
கடந்தாண்டு ‘Quotation Gang’ குறித்து அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகிவிட்டது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு க்ரைம் திரில்லராக உருவாகும் இந்த படத்தில் பல முன்னணி கலைஞர்கள் இதுவரை பார்த்திடாத கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அந்த வகையில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஜாக்கி ஷெராப், ‘தெய்வத்திருமகள்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த சாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீப், விஷ்னோ வாரியர், அக்ஷயா, கியாரா, சோனால், சதீந்தர் & ஷெரின் ஆகியோரும் நடிக்கின்றனர்.
விவேக்.கே கண்ணன் படத்தை இயக்குவதோடு, ஸ்ரீ குரு ஜோதி பிலிம்ஸின் ஜி. விவேகானந்தனுடன் இணைந்து ஃபிலிமினாட்டி என்டர்டெயின்மென்ட் சார்பில் காயத்ரி சுரேஷுடன் இணைந்து படத்தை தயாரித்தும் இருக்கிறார்.
படத்தின் காட்சிகள் காஷ்மீர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்பை மற்றும் சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
படம் உலகம் முழுவதும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
தொழில்நுட்பக் குழு:
ஒளிப்பதிவு: அருண்,
படத்தொகுப்பு: கே. வெங்கட்ராமன்,
கலை இயக்குநர்: ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்,
சண்டைப் பயிற்சி: ஓம் பிரகாஷ்

