இந்தியாவின் மிகப் பெரிய வங்கியல்லாத நிதி நிறுவனமான ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் (ஸ்ரீராம் பைனான்ஸ்), தமிழ்நாட்டில் தாம் நிர்வகிக்கும் சொத்துகளின் மதிப்பு 30,000 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக இன்று அறிவித்தது.
இந்த வளர்ச்சிக்கு, பொருளாதார முன்னேற்றமும், கிராமப்புற சந்தைகள் மீண்டெழுந்ததும், உள்கட்டுமான நடவடிக்கைகள் மீண்டும் வேகம் பிடித்ததுமே காரணங்கள் ஆகும். இதனால், வர்த்தக வாகனங்கள், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள், இருசக்கர வாகனங்களுக்கான கடன் கோருவது அதிகரித்துள்ளது. இத்தகைய 10,60,000 வாடிக்கையாளர்களின் பலதரப்பு நிதித் தேவைகளை, ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம், தமது 675 கிளைகள் வாயிலாக, 12,000 பணியாளர்களின் பலத்தோடு நிறைவு செய்து வருகிறது.
இந்நிறுவனத்தில் தான் அதிகபட்ச வைப்பு நிதி பிரிவு இயங்குகிறது. அதில், 64,000 முதலீட்டாளர்கள், 4,290 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். சுயதொழில் முனைவோர் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் பிரிவினர் மீது கவனம் செலுத்துவதையே தமது வளர்ச்சிக்கான உத்தியாக இந்த நிறுவனம் கருதுகிறது.
வர்த்தக வாகனக் கடன்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனமும், இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் முன்னணியில் இருக்கும் ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் நிறுவனமும் சமீபத்தில் ஒருங்கிணைந்து ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் (ஸ்ரீராம் பைனான்ஸ்) என்ற புதிய நிறுவனம் உதயமானது. அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்தும் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிகர மதிப்பு 37,500 கோடி ரூபாய் ஆகும். மேலும், செப்டம்பர் 2022 முடிய, இந்தியாவெங்கும் உள்ள 67 லட்சம் வாடிக்கையாளர்களின், 1 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை இந்நிறுவனம் நிர்வகிக்கிறது.
தமிழ்நாட்டுக்கான வளர்ச்சித் திட்டம்: இந்தப் பகுதியில், வர்த்தக வாகன கடன், சிறு, குறு, நடுத்தரத் தொழில் கடன், இருசக்கர வாகன கடன், தங்க நகை கடன், தனிநபர் கடன் ஆகிய 5 பிரிவுகளே முன்னிலை வகிக்கின்றன. வங்கிச் சேவைகள் போதுமான அளவு கிடைக்காதோர் மத்தியில், நிதிச் சேவைகளை வழங்குவதன் மூலம், தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்திக்கொள்ளவே இந்நிறுவனம் விரும்புகிறது. குறிப்பாக, சுயதொழில் செய்யும், முதலீடு தேவைப்படும், ஆனால் முறையான வருமானச் சான்றிதழ் அற்றவர்கள் மீது கவனம் செலுத்த விரும்புகிறது.
எதிர்காலத்தில் வர்த்தக வாகனக் கடன் வழங்குவதில் ஸ்ரீராம் பைனான்ஸ் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, போக்குவரத்துத் துறையில் இயங்கும் சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு கடன் சேவைகளை விரிவுபடுத்துவதன் வாயிலாக, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மேலும் முக்கியத்துவம் பெறும். சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்குள்ளேயே, பல்வேறு சிறு சிறு குழுக்களை உருவாக்கி, அவற்றுக்கான கடன்களைப் பன்மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. இருசக்கர வாகனக் கடன் வாயிலாக, தகுதியான சுயதொழில் முனைவோர் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறு, குறு, நடுத்தரக் கடன்களை தருவதற்கும் முயற்சி எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள இந்நிறுவனத்தின் 675 கிளைகளில், 450 கிளைகளில் வர்த்தக வாகனக் கடன்கள் வழங்கப்படுகின்றன. 675 கிளைகளிலுமே இருசக்கர மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் கடன்கள் வழங்கப்படுகின்றன. 375 கிளைகளில் தங்க நகைக் கடன் வழங்கப்படுகிறது. வரும் மார்ச் 2023க்குள் மேலும் 50 கிளைகளில் தங்க நகைக்கடனும், மேலும் 50 கிளைகளில் வர்த்தக வாகனக் கடனும், அனைத்து 675 கிளைகளிலும் தனியார் கார் கடனும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் உமேஷ் ரேவன்கர் பேசும்போது, “இது நாள் வரை, சாதாரண மனிதர்களுக்கு கடன் கொடுப்பதே ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தின் உத்தியாக இருந்தது. அதுவும், போக்குவரத்துத் துறை சார்ந்த கடன்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இனிமேல், சுயதொழில் செய்வோர் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் செய்வோர் மீதும் எங்கள் கவனம் விரிவடையும், அவர்களுக்கு ஏற்ப எங்களுடைய நிதிச் சேவைகளும் அதிகரிக்கும். சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினரிலும் அடிமட்டத்தில் தவிப்போர் மீது தான் எங்கள் கவனம் இருக்கும். அவர்கள் தான், கடன் வசதி பெறுவதற்கு கூடுதலாக செலவு செய்பவர்கள், மேலும் உரிய நேரத்தில் அவர்களுக்குத் தான் கடன் கிடைக்கவும் மாட்டேன் என்கின்றன. இருசக்கர வாகனக் கடனைப் பொறுத்தவரை, நாங்கள் சுயதொழில் செய்வோர் மீது கவனம் செலுத்துவோம். ஏனெனில், அவர்கள் தான், தமது வேலைகளுக்காக தமது வாகனங்களைப் பயன்படுத்தி, அதன் மூலம், தொழில் முனைப்பை மேம்படுத்துகின்றனர்,” என்றார்.
ஸ்ரீராம் பைனான்ஸ் கூடுதல் நிர்வாக இயக்குநர் பி. ஸ்ரீதரன் பேசுகையில், “ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் மற்றும் ஸ்ரீராம் சிட்டி ஆகிய நிறுவனங்கள் ஒருங்கிணைந்து ஸ்ரீராம் பைனான்ஸ் என்ற நிறுவனம் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் எங்களுக்கு உள்ள பிரத்யேகமான வெற்றிகரமான வர்த்தக உறவின் மூலமாக நாங்கள் எங்கள் வணிகத்தை மேம்படுத்துவோம். அடுத்த ஓராண்டுக்குள் இரண்டு நிறுவனங்களும் பெற்றுள்ள தனித்திறன்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டு வளர்ச்சி அடைய முயற்சி செய்வோம். ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவன வணிகத்தில், தமிழ்நாடு மிகப் பெரிய அளவில் பங்களிப்பு செய்கிறது. அது மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுவதோடு, மக்களுடைய நலனுக்கானப் பணியாற்றும் தொலைநோக்குப் பார்வையுள்ள வளர்ச்சி சார்ந்த அரசாங்கமும் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்,” என்றார்.
ஸ்ரீராம் பைனான்ஸ் பற்றி:
ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட், இந்தியாவின் மிகப் பெரிய முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனம் ஆகும். இது, 1.71 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை நிர்வாகம் செய்கிறது. சமீபத்தில், ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் நிறுவனமும் ஸ்ரீராம் கேப்பிடல் நிறுவனமும் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தோடு இணைந்து, ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் என்ற புதிய பெயரைப் பெற்றது. இந்நிறுவனம், வர்த்தக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான முறையான கடன்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. பல்வேறு நிதிச் சேவைகள் உள்ளன. அவற்றில், வாடிக்கையாளர்களுக்கான வர்த்தக வாகனக் கடன்கள், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கான கடன்கள், டிராக்டர் கடன், தங்க நகை கடன், தனிநபர் கடன், நடப்பு மூலதனக் கடன் ஆகியவை அடங்கும். கடந்த 43 ஆண்டுகளாக, கடன் தேவைகளைப் புரிந்துகொள்வதிலும், வர்த்தக வாகனங்கள் மற்றும் இதர சொத்துகளை மதிப்பிடுவதிலும், கடனை வசூலிப்பதிலும் இந்நிறுவனம் திறமை பெற்றுள்ளது. இந்தியாவெங்கும் 3,600 கிளைகளோடு, 67 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு 57,000 பணியாளர்களைக் கொண்டு இந்நிறுவனம் சேவை செய்து வருகிறது.
ஸ்ரீராம் குழுமம் பற்றி:
ஸ்ரீராம் குழுமம், இந்தியாவின் மிகப் பெரிய முன்னணி நிதிச் சேவை நிறுவனமாகும். இந்நிறுவனம், வர்த்தக வாகனக் கடன், சில்லறை கடன், சிட் பண்டு,சிறு,குறு, நடுத்தரத் தொழில் கடன், வீட்டுக் கடன், ஆயுள் காப்பீடு, பொதுக் காப்பீடு, சொத்து நிர்வாகம், பங்குத் தரகு, நிதிச் சேவைகள் வினியோகம், மூலதன ஆலோசனை சேவைகள் ஆகியவற்றில் முன்னிலை வகிக்கிறது. நிதிச் சேவைகள் கிடைக்காதோருக்கு அச்சேவைகளை வழங்குவதற்கே இந்தக் குழுமம் முக்கியத்துவம் அளிப்பதோடு, குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் சிறு தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கு நிதிச் சேவைகளை வழங்குவதைத் தனது இலக்காக வைத்துச் செயல்படுகிறது. ஸ்ரீராம் குழுமத்தின் தாய் நிறுவனம் ஸ்ரீராம் பைனான்ஷியல் வென்சர்ஸ் (சென்னை) பிரைவேட் லிமிடெட் நிறுவனமாகும். இது தான், நிதிச் சேவைகளை வழங்கும் ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனமான ஸ்ரீராம் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தை ஊக்குவிக்கிறது. மேலும், காப்பீட்டு நிறுவனங்களான ஸ்ரீராம் ஜெனரல் இன்ஷு கம்பெனி லிமிடெட் மற்றும் ஸ்ரீராம் லைப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தையும் வளர்த்தெடுகிறது.