அழகான புத்திசாலி திருடனின் ஆக்ஷன் அதிரடியும் சாகச விளையாட்டும்! டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ் ஹாலிவுட் படம் ஒரு பார்வை!

DUNGEONS & DRAGONS:HONOR AMONG THIEVES
டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ் என்பது வீட்டிற்குள் விளையாடப்படும் ஓர் உள்ளரங்க விளையாட்டு. மேசையைச் சுற்றி வீரர்கள் அமர, அதிலொருவர் டன்ஜியன் மாஸ்டராகப் பங்கு வகிப்பார். மற்ற வீரர்கள் ஒரு பாத்திரத்தை பிரதிநிதித்துவப் படுத்துவார்கள். ஒவ்வொரு வீரரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கான செயல்களைப் புரிவதோடு, மற்ற கதாபாத்திரங்களுடன் அதற்குத் தக்கவாறு தொடர்புகளையும் கொண்டிருப்பர். இதுவே, இந்த சாகச விளையாட்டின் முக்கிய அம்சமாகும்.

கதைச்சுருக்கம்: அழகான புத்திசாலி திருடன் ஒருவன் சாகசக்காரர்களின் குழுவுடன் கைகோர்த்து, தொலைந்து போன நினைவுச் சின்னத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஒரு சாகசக் கொள்ளையை மேற்கொள்கிறான். ஆனால் அவர்கள் தவறான நபர்களை எதிர்கொள்ள நேரிடும்போது, அவர்கள் செயல் விபரீதமாக முடிகிறது. படம், இந்த சாகச விளையாட்டு ஏற்படுத்தும் உற்சாகத்தையும் உத்வேக உணர்வையும், ஆக்ஷன் கலந்த நகைச்சுவையுடன் பெரிய திரையில் கொண்டு வந்துள்ளது.

படக்குழு:-

இயக்கம் -Jonathan Goldstein & John Francis Daley

திரைக்கதை- Jonathan Goldstein & John Francis Daley and Michael Gilio

கதை- Chris McKay & Michael Gilio

மூலக்கதை- HASBRO’S DUNGEONS & DRAGONS

நடிகர்கள்- Chris Pine, Michelle Rodriguez, Regé-Jean Page, Justice Smith, Sophia Lillis, Chloe Coleman, Daisy Head and Hugh Grant
This fantasy action thriller is by
Paramount Pictures (India), exclusively released by Viacom 18 Studios

வெளியீடு – Sony Pictures in English, Tamil, Telugu & Hindi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here