தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் நந்தமுரி கல்யாண் ராம் மற்றுமொரு சுவாரஸ்யமான கதையம்சம் கொண்ட டெவில் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் என்ற டேக்லைனுடன் வருவது மற்றுமொரு சுவாரஸ்யம்.
இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் நவம்பர் 24, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.
சம்யுக்தா இப்படத்தில் கல்யாண் ராம் ஜோடியாக நடிக்கிறார். மலையாள நடிகையான சம்யுக்தா இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 11) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
சம்யுக்தா பிறந்தநாளை முன்னிட்டு, டெவில் படத்தில் சம்யுக்தா நடிக்கும் நிஷாதா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் , சம்யுக்தா பாரம்பரிய தோற்றத்தில் இனிமையான புன்னகையுடன் காணப்படுகிறார். அவரது தெய்வீகமான லுக் ரசிகர்களால் மலர்கள் கொண்டு பூஜித்து வழிபடுமளவு சிறப்பாக அமைந்துள்ளது.
நந்தமுரி கல்யாண் ராம், ‘டெவில்’ படத்தில் ஒரு ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் பிரிட்டிஷ் ரகசிய ஏஜென்டாக நடிக்க இருக்கிறார். கடந்த ஆண்டு தெலுங்குத் திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘பிம்பிசாரா’ படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த கல்யாண் ராம், இந்த ஆண்டு ‘டெவில்’ படத்தின் மூலம் அனைவரையும் கவரத் தயாராகி வருகிறார்.
தேவன்ஷ் நாமா வழங்கும் இத்திரைப்படத்தை, அபிஷேக் பிக்சர்ஸ் பேனரின் கீழ் அபிஷேக் நாமா தயாரித்து இயக்குகிறார். டெவில் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை ஸ்ரீகாந்த் விசா வழங்கியுள்ளார். படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார். சௌந்தரராஜன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.