Home சினிமா அறிமுக நாயகன் அஜய் கார்த்தி, நடிகர் நேத்திரனின் மகள் அஞ்சனா நடிக்கும் டார்க் படத்தை தயாரிக்கும்...

அறிமுக நாயகன் அஜய் கார்த்தி, நடிகர் நேத்திரனின் மகள் அஞ்சனா நடிக்கும் டார்க் படத்தை தயாரிக்கும் டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு! 

‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே பாபு, கதை எழுதி தயாரிக்க, அறிமுக இயக்குநர் கல்யாண் கே ஜெகன் திரைக்கதை, இயக்கத்தில், அறிமுக நடிகர் அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘டார்க்’ திரைப்படத்தின், அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

இளைஞன் ஒருவனுக்கு ஏற்படும் அமானுஷ்ய விசயங்களும் அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களுமே படத்தின் கதை.

ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும், அதிரடி திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிகல் ஹாரர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

காமெடி பேய்ப்படங்களுக்கு மத்தியில், மாறுபட்ட களத்தில், ஒரு அதிரடியான அனுபவம் தரும் படமாக, இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் கல்யாண்கே ஜெகன்.

நடிகர் நேத்திரனின் மகள் அஞ்சனா நாயகியாக நடித்துள்ளார். நட்டி நட்ராஜ் , இயக்குநர் கே. பாக்யராஜ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி டி வி கணேஷ், இந்துமதி, சிபி ஜெயக்குமார், அர்விந்த் ஜானகிராமன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

பெரும் பொருட்செலவில் புதுமையான படைப்பாக, பல வெற்றிப்படங்களைத் தந்த ஃபைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் எம் ஜி ஸ்டுடியோஸ் மாறன், இயக்குநர் கணேஷ் கே பாபு இணைந்து தயாரித்துள்ளனர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், படத்தினை திரைக்கு கொண்டு வரும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

விரைவில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது.

படக்குழு:
ஒளிப்பதிவு – ரவி சக்தி
இசை – மனு ரமீசன்
எடிட்டர் – கதிரேஷ் அழகேசன்
கலை இயக்கம் – சண்முக ராஜா
நிர்வாக தயாரிப்பு – மீனா அருணேஷ்
ஒலி வடிவமைப்பு – அருணாசலம் சிவலிங்கம்
ஸ்டன்ட் – நைஃப் நரேன்
டிசைன்ஸ் – விக்ராந்த்
மேக்கப் – முகம்மத்
ஸ்டில்ஸ் – குமரேசன்
சிஜி – NxGen Media
மக்கள் தொடர்பு – நிகில் முருகன் & திருமுருகன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்