கவின் – அபர்ணா நடிக்கும் படம் ‘டாடா.‘ இந்த படத்தில் கே. பாக்யராஜ், ஐஷ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ படப் புகழ் ஹரீஷ், ‘வாழ்’ படப் புகழ் ப்ரதீப் ஆண்டனி மற்றும் பலர் இதில் நடித்திருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
ஒலிம்பியா மூவீஸ் S. அம்பேத்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திலிருந்து ஏற்கனவே வெளியான முதல் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அழகான ரொமாண்டிக் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.
இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்துள்ளது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய, பட வெளியீட்டுக்கான பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.
படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு விரைவில் நடக்கவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவிருக்கிறது.
படக்குழு:
ஒளிப்பதிவு : எழில் அரசு,
இசை : ஜென் மார்ட்டின்,
எடிட்டிங் : கதிரேஷ் அழகேசன்,
கலை: சண்முகராஜ்,
ஆடை வடிவமைப்பு: சுகிர்தா பாலன்,
எக்ஸ்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர்: APV மாறன்,
ஒலி வடிவமைப்பு: அருணாச்சலம் சிவலிங்கம்.