லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி, உலகநாயகன் கமல்ஹாசன் – விஜய் சேதுபதி – ஃபஹத் பாசில் – சூர்யா நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
திரையரங்குகளில் இப்போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் வரும் ஜூலை 8-ம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுதும் வெளியாகிறது.
விக்ரம் திருவிழாவை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தான் முதன்முதலில் தொடங்கி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்ட்-கோர் ஆக்சன் திரைப்பட ஆர்வலர்கள் கார்த்தி நடித்த ‘கைதி’ திரைப்படத்தை புகழ்பெற்ற டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் திரையரங்குகளில் ‘விக்ரம்’ என்ற பிரமாண்டமான ஆக்ஷன்-பேக் த்ரில்லரைப் பார்ப்பதற்கு முன்பாக பார்த்தார்கள், இது இரு திரைப்பட உலகங்களுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ள நிறைய பங்களித்தது.