பிரியாமணி சி.பி.ஐ. அதிகாரியாக நடித்துள்ள ‘DR 56.’ நான்கு மொழிகளில் டிசம்பர் 9-ம் தேதி ரிலீஸ்!

தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி கதையின் நாயகியாக, சி.பி.ஐ. அதிகாரியாக நடித்திருக்கும் படம் ‘DR 56.’

அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் மற்ற கதாபாத்திரங்களில் பிரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட், யத்திராஜ், வீணா பொண்னப்பா, மஞ்சுநாத் ஹெக்டே, சுவாதி ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் ராஜேஷ் ஆனந்த் லீலாவிடம் கேட்டோம்… ”இது அறிவியல் சார்ந்த கிரைம் திரில்லர். தற்போது சமூகத்தில் நிலவிவரும் உண்மைச் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறோம்.

இந்த கதையை சொல்லும்போதே பிரியாமணி மிகவும் பிரமிப்பானார். நேர்த்தியான சி.பி.ஐ. அதிகாரியாக நடிக்க தன்னை தயார்படுத்திக் கொண்டார். படம் தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுத்ததால் ஓரே காட்சிகளை மாற்றி மாற்றி எடுப்பதில் சவாலாக இருந்தது. விறுவிறுப்பான திரைக்கதை, ரசிகர்களிடம் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும். பிரியாமணி தனது திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் தமிழ் படம் இது” என்றார்.

ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் ஏ.என். பாலாஜி வழங்க, ஹரி ஹரா பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 9-ம் தேதி ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படக்குழு:
கதை, திரைக்கதை, தயாரிப்பு – பிரவீன் ரெடி.T
இயக்கம் – ராஜேஷ் ஆனந்த் லீலா
ஒளிப்பதிவு – ராகேஷ் சி திலக்
இசை – நோபின் பால் ( சார்லி 777 படத்திற்கு இசையமைத்தவர் )
வசனம் – ஷங்கர் ராமன்
பாடல்கள் – சரவணவேல்.S.K, ஷங்கர் ராமன்.
எடிட்டிங் – விஷ்வா N M,
ஸ்டண்ட் – தேசிய விருது பெற்ற விக்ரம் மோர் ( இவர் கேஜிஎப், காந்தாரா ஆகிய படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்துள்ளார் ).
நடனம் – கலை,நரசிம்ம ஆனேக்கல்
மக்கள் தொடர்பு – மணவை புவன்.
இணை தயாரிப்பு – Dr.A.B.நந்தினி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here