விமல், யோகிபாபு நடிக்கும் புதிய படம் பொங்கலுக்கு ரிலீஸ்!

விமல், யோகிபாபு நடிக்கும் புதிய படத்தை இயக்கி, கான்ஃபிடன்ட் பிலிம் கேஃப் (Confident Film Cafe) சார்பில் அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார் அப்துல் மஜீத். (விஜய் நடித்த ‘தமிழன்’, ‘துணிச்சல்’, ‘டார்ச் லைட்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் இவர்.)

இந்த படத்தில் விமல் ஜோடியாக சாம்மிகா, ஐஸ்வர்யா தத்தா நடிக்கின்றனர். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், பேராசிரியர் ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், சாம்ஸ், நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இன்று உலகமே புரோக்கர் மயமாகி விட்டது. அதில் சில புரோக்கர்கள்  தம் சுயநலத்திற்காக வியாபாரத்திலும், தொழில் ரீதியாக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். அந்த பாதிப்பில் இருந்து கதாநாயகன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, சென்டிமென்ட், ஆக்‌ஷன் ரொமான்ஸ் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கான படப்பிடிப்பு சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நடந்து முடிந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சி வேலூர், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள அரண்மனை போன்ற இடத்தில் நடக்கவுள்ளது.

பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட் டுள்ளனர். முன்னதாக படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக், ஆடியோ வெளியிடப்பட உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here