‘ஹாஸ்டல் டேஸ்’ இந்தி இணையத்தொடரின் (வெப் சீரிஸ்)) தமிழ் வெர்ஷனான ’எங்க ஹாஸ்டல்’ வரும் ஜனவரி 27-ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கிறது.
நகைச்சுவை டிராமாவாக உருவாகியிருக்கும் இந்த இணையத் தொடரில் சச்சின் நாச்சியப்பன், அவினாஷ் ரமேஷ், சம்யுக்தா விஷ்வநாதன், சரண்யா ரவிச்சந்திரன், கெளதம் ராஜ் மற்றும் டிராவிட் செல்வம் ஆகியோர் இந்த ஹாஸ்டலின் புது பேட்ச் பொறியாளர்களாக நடித்துள்ளனர்.
கல்லூரி நாட்களின் குறிப்பாக ஹாஸ்டல் நாட்களின் நினைவுகள் நம் வாழ்க்கையில் மறக்க முடியாதவையாக அமைந்திருக்கும். ’எங்க ஹாஸ்டல்’ அதுபோன்ற ஒரு மகிழ்ச்சிகரமான பொறியாளர்களையுடைய ஹாஸ்டல் வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
சமீபத்தில் ‘எங்க ஹாஸ்டல்’ தொடரின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


