Home சினிமா ரோபோ சங்கர் நடிப்பில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் நடக்கும் யுத்தமாக உருவாகியுள்ள ‘ஈகோ ராமன்’ இன்னும் சில...

ரோபோ சங்கர் நடிப்பில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் நடக்கும் யுத்தமாக உருவாகியுள்ள ‘ஈகோ ராமன்’ இன்னும் சில தினங்களில் ரிலீஸ்!          

ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஈகோ ராமன்.’

மாணவன் ஒருவன் தன் அம்மாவின் கனவை நிறைவேற்ற அரசு வேலைக்கு தேர்வு எழுதுகிறான். எதிர்பாராத விதமாக அவன் வாழ்வில் ஏற்படும் சில நிகழ்வுகளால் ஆசிரியருக்கும் அவனுக்கும் இடையேயான இணக்கம் தடைபடுகிறது. அதனால் மிகவும் பாதிப்படைகிறான். இதில் மாணவருக்கும் ஆசிரியருக்கும் மனதளவில் ஒரு யுத்தம் நடக்கிறது. இறுதியில் வென்றது ஆசிரியரா? மாணவனா? என்பதை விறுவிறுப்புடன் சொல்கிறது இந்த படத்தின் கதை.
அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும்,  நாயகியாக கீர்த்தனாவும், மற்ற கேரக்டர்களில் கவிதா ரமேஷ், சப்பானி முரளி, சேரன்ராஜ், லதா ஆகியோரும் நடித்துள்ளனர்.
கணேசன் நாச்சிமுத்து கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி மற்றும் கோவை புறநகர் பகுதிகளில் 45 நாட்களில் இருகட்டமாக நடந்து நிறைவடைந்துள்ளது.
படம் இந்த மே மாதம் வெளியாகவுள்ளது. படத்தை திரையரங்குகளில் உத்ரா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.
படக்குழு:-
தயாரிப்பு – சுதா.ஜி
பாடல்கள் &  இசை – ரெய்மன் ராட்ரிக்ஸ்
மக்கள் தொடர்பு- வெங்கட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்