‘எமோஜி‘ வலைத் தொடர் (WebSeries) விமர்சனம்
வாலிப நெஞ்சங்களுக்கு மட்டுமே பிடிக்கும்படி எடுக்கப்பட்ட வலைத் தொடர்… 
தொடர் முழுக்க தொடை காட்டித் திரிவது இரண்டு ஹீரோயின்களின் வேலை; அவர்களின் வளைவு நெளிவுகளை ரசிப்பதும், உணர்ச்சி வசப்படும்போது ருசிப்பதும் ஹீரோவின் வேலை என நீளும் 18+ எபிசோடுகளின் தொகுப்பு… நிறைவில் அவனது குடும்ப வாழ்க்கை யாருடன் தொடர்கிறது என்பது சற்றே உயிரோட்டமுள்ள கிளைமாக்ஸ்…
ஹீரோ தன் முதல் ஜோடியுடன் இளமைப் பசியைத் தீர்த்துக் கொண்டதையும் தாண்டி நிஜமாகவே காதலிக்கிறார்; அந்த காதலை ஹீரோயினும் ஏற்கிறார். அப்படியிருந்தும் அவர்கள் பிரிவதற்கான காரணம் திரைக்கதையிலிருக்கும் டிவிஸ்ட். இயக்கம்: சென். எஸ்.ரெங்கசாமி
ஐடி இளைஞனாக மஹத். அளவாய் மது அருந்துவது, அளவில்லாமல் அடல்ஸ் ஒன்லி சமாச்சாரத்தில் ஈடுபடுவது என மனிதர் எக்குத் தப்பாக வாழ்ந்திருக்கிறார். உடம்புக்கு பிடித்தவர், மனதுக்கும் பிடித்தவர் என உணரும் காட்சிகளில் மனம் நொறுங்குவதை முகத்தில் காட்டுவது கெத்து. பெர்பாமென்ஸில் அவ்வப்போது சிம்பு எட்டிப் பார்ப்பது ஏன் என்பது புரியவில்லை. வசன உச்சரிப்புகூட எஸ்.டி.ஆர். டப்பிங் பேசியது போலிருக்கிறது!
காமப் பார்வை, கட்டில் வேட்டை, கத்தை கத்தையாக காண்டம் பர்ச்சேஸ் என கதை கதைநாயகிகள் மானசா செளத்ரி, தேவிகா சதீஷ் இருவரும் சதைநாயகிகளாகி போட்டி போட்டு வெளுத்திருக்கிறார்கள். அதிலும் போட்டோகிராபராக வரும் தேவிகாவின் நடிப்புப் பங்களிப்பு, ‘கொஞ்சம் விட்டால் சன்னிலியோன், மியா கலீபா ரேஞ்சுக்கு இறங்குவேன்’ என வாக்குமூலம் தருவது போலிருக்கிறது. அவரது கண்களில் சதா காமம் கசிந்துகொண்டேயிருப்பதும், ஆர்ம்பிட்டில் வியர்வை சுரந்துகொண்டேயிருப்பதும் 18+ இளைஞர்களுக்கு போதையேற்றும். நீதிமன்றக் காட்சிகளில் அவரது உள்ளத்தின் துடிப்பை விழிகள் மூலம் கடத்தும்போது அவருக்கு நடிக்கவும் தெரியும் என்பது நமக்குத் தெரிகிறது.
ஹீரோயினின் அப்பா, ஹீரோ உள்ளிட்ட இளைஞர்களுடன் சேர்ந்து பியர் குடிப்பதும் அதன் பின்னான ரகளைகளும் லகலக!
பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் அத்தனையும் கச்சிதம்.
ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த வலைத் தொடர் இப்போது ஆஹா ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

