சார்லி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து பரபரப்பான திரில்லராக வினோத் ராஜேந்திரன் இயக்கும் படம் ‘ஃபைண்டர்.’
அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து, அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுத்தரும் நிறுவனத்தை பற்றிய உண்மைக் கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
சார்லியோடு சென்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், நடிகை பிரானா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் இயக்குநர் வினோத் ராஜேந்திரன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பட வெளியீட்டுக்கான போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகரும் இயக்குநருமான எஸ் ஜே சூர்யா ஆகியோர் சமூக வலைதளத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.
சிறை பின்னணியில் சார்லி நிற்க, ஒரு திரில்லர் படத்திற்கான அத்தனை அம்சங்களும், நிறைந்ததாக அட்டகாசமாக உள்ளது அந்த ஃபர்ஸ்ட் லுக்.
படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு நிறுவனம் – Arabi production & Viyan ventures
தயாரிப்பாளர்கள் – ரஜீஃப் சுப்பிரமணியம் & வினோத் ராஜேந்திரன்
இயக்கம் – வினோத் ராஜேந்திரன்
ஒளிப்பதிவு – பிரசாந்த் வெள்ளிங்கிரி
எடிட்டர் – தமிழ்க்குமரன்
கலை இயக்கம் – அஜய் சம்பந்தம்
இசை – சூர்ய பிரசாத்
மக்கள் தொடர்பு – சுல்தான் ராஜா


