Home சினிமா இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவம் தரப்போகும், ஆரி அர்ஜுனன் நடித்துள்ள ‘ஃபோர்த் ஃப்ளோர்’ பிப்ரவரியில் ரிலீஸ்!

இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவம் தரப்போகும், ஆரி அர்ஜுனன் நடித்துள்ள ‘ஃபோர்த் ஃப்ளோர்’ பிப்ரவரியில் ரிலீஸ்!

ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள ‘ஃபோர்த் ஃப்ளோர்’ திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தில் தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சென்னையின் மையப்பகுதி ஒன்றில், ஒரு குடியிருப்பில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் எல் ஆர் சுந்தரபாண்டி. சைக்காலஜிகல் திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படம், கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பினை எதார்த்தமாக சொல்லுகிறது. படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்