Home பொது ரோம் காம் சப்ஜெக்டில் ஐந்து மொழிகளில் உருவான ‘ஃபீல் மை லவ்’ படத்தின் கலக்கலான புதிய...

ரோம் காம் சப்ஜெக்டில் ஐந்து மொழிகளில் உருவான ‘ஃபீல் மை லவ்’ படத்தின் கலக்கலான புதிய போஸ்டர்!

காதல், நகைச்சுவை கலந்த ‘ஃபீல் மை லவ்’ திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

பான் இந்திய படைப்பாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ஹரி பிரகாஷ்.எம் இயக்கியுள்ளார்.
எம் எஸ் பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜ் ஐயப்பா, நோபிள் ஜேம்ஸ், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன் ராவ் நடித்துள்ளார்.
பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல ‘பான்-இந்தியா’ திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் ஏ என் பாலாஜி முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம்.
‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்த எம்.எஸ். சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜரவிவர்மா எஸ் மற்றும் பாலசுப்ரமணியன் ஜி ஆகியோர் இசையமைக்கின்றனர்.
லவ்’, ‘கொலைச் சேவல்’ உள்ளிட்ட படங்கள் மற்றும் பல குறிப்பிடத்தக்க விளம்பரப் படங்களில் பணியாற்றிய அஜய் மனோஜ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது “வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம் என்ற மனதிற்கு இதமான கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுவாரஸ்யமான தருணங்கள், இயல்பான உறவுகள், ஆழமான உணர்ச்சிகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு தனித்துவமான காதல் – நகைச்சுவைத் திரைப்படமாக இருக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்