Home சினிமா கெளதம் ராம் கார்த்திக், அபர்ஷக்தி நடிக்கும் ரூட் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

கெளதம் ராம் கார்த்திக், அபர்ஷக்தி நடிக்கும் ரூட் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

கெளதம் ராம் கார்த்திக், அபர்ஷக்தி நடிக்கும் ரூட் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அதையடுத்து இயக்குநர் சூரியபிரதாப் எஸ், “முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்தது படக்குழுவிற்கு உற்சாகமான அனுபவமாக இருந்தது. கௌதம் – அபர்ஷக்தி இணைந்து தோன்றும் காட்சிகள் திரையரங்கில் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். சென்னை நகரின் பரபரப்பான பின்னணி இந்த படத்துக்கு கூடுதல் விறுவிறுப்பை சேர்த்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அதில் அதிரடி காட்சிகளும், ரசிகர்களுக்கான பல அசத்தலான ஆச்சரியங்களும் காத்திருக்கின்றன” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்