புதுவிதமான கற்பனையுடன் ரோம் – காம் வகை படைப்பாக உருவாகும் ‘காட்ஸ்ஜில்லா’ படத்தில், ‘சரண்டர்’ படம் மூலம் புகழ் பெற்ற தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.
படத்தின் இன்னொரு நாயகனாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறார். அலிஷா மிரானி, ரோபோ சங்கர், கே பி ஒய் வினோத், பிளாக் பாண்டி, பி ஜி எஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். தனித்துவமான திரைக்கதைக்கு பெயர் பெற்ற இயக்குநர் மோகன் குருசெல்வா இயக்குகிறார்.
இந்த படத்தின் பூஜை செப்டம்பர் 15; 2025 அன்று காலை சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு , இயக்குநர்கள் ஆர் கே செல்வமணி, விஜய், சசி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
நிகழ்வில் படத்தின் நாயகன் தர்ஷனின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது ”காதலில் தோல்வியுற்ற இளைஞன் ஒருவரின் வாழ்க்கையில் தெய்வீக தலையீடு நிகழ்வதன் மூலம் சுயஅறிவு, மீட்பு மற்றும் காதலை நோக்கிய பயணம் தான் படத்தின் மையக்கரு. பொழுதுபோக்கும் உணர்ச்சியும் கலந்த திரைப்பட இது” என்றார்.
வானுலக கற்பனைக் காட்சிகளும், புவியுலக நிறமிகு காட்சிகளும், ஆன்மிக இசையும், தத்துவம் கலந்த நகைச்சுவையும் இணைந்து, இன்றைய இளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் விதமாகவும், குடும்பங்கள் ரசிக்கக்கூடிய விதமாகவும் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
படம் புராணம், கற்பனை, நவீன காதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் புதுமையான திரை அனுபவமாக தயாராகிறது.
சமீபத்தில் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டை பெற்ற ‘பிளாக் மெயில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை தயாரிக்கிறது. சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஜி. தனஞ்ஜெயன் மற்றும் பி ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
படக் குழு: ஒளிப்பதிவு – சிவராஜ், படத்தொகுப்பு – அரவிந்த் பி. ஆனந்த், இசை – கார்த்திக் ஹர்ஷா, கலை இயக்கம் – சௌரப் கேசவ்


