மணிரத்னம் இயக்கி கடந்தாண்டு வெளியாகி பெரியளவில் ஹிட்டான ‘பொன்னியின் செல்வன் – பாகம் 1’ திரைப்படம் சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி), சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்), சிறந்த ஆடை வடிவமைப்பு (ஏகா லக்கானி) என ஆசிய திரைப்பட விருதுகளுக்கான 6 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.
அதையடுத்து, இன்று ஹாங்காங்கில் நடைபெறுகிற 16-வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் சுபாஸ்கரன் சார்பாக ஜி்.கே.எம்.தமிழ் குமரன், ‘இயக்குநர் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக அதன் நிர்வாகத் தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் ஸ்ரீகர் பிரசாத், ரவி வர்மன் மற்றும் செல்வி. ஏகா லகானி ஆகியோர் கலந்து கொண்டனர்.


