ஆசிய கண்டத்தின் சிறந்த நடிகராக குருசோமசுந்தரம்!  ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்’ கமிட்டி அங்கீகாரம். 

ஆசிய கண்டத்தின் திரைப்படங்களுக்கான ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட் 2022’ விருதுக்கான தேர்வில் 16 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மொழிப் படங்கள் கலந்துகொண்டன.
சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலிருந்து ‘மின்னல்முரளி’ படத்தில் நடித்ததற்கான அங்கீகாரமாக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் குருசோமசுந்தரத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் மாதம்  சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது. ஆசிய கண்டத்தின் பல்வேறு நாடுகளை சார்ந்த பல்வேறு மொழி திரைத்துறையைச் சார்ந்தவர்களும் இதில் கலந்துகொள்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here