‘ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்’ மனிதநேய விருது வழங்கும் விழா! தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பங்கேற்று ஊக்குவிப்பு!

மனிதநேயத்தோடு செயல்படுகிற நிறுவனங்களையும், சமூக சேவையாற்றும் தன்னார்வ அமைப்புகளையும் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறது 75 ஆண்டுகால பாரம்பரியமிக்க ‘ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்.’

அந்த வகையில் இந்த வருடம் ‘ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்’ தனது சேம்பர் தினத்தைக் கொண்டாடிய நிகழ்வில் மேற்குறிப்பிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

1980-களில் தொடங்கப்பட்டு இன்று 12,0000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 160 கிளைகளுடன் விரிந்து பரந்துள்ள அடையார் ஆனந்தபவன் வணிகத்துறையில் சிறந்து விளங்குவதற்கான விருதுக்கு தேர்வாகி விருது வழங்கப்பட்டது.சமூக சேவைக்கான மனிதநேய விருது, செல்வி ப்ரீத்தி சீனிவாசனால் 2013-ம் ஆண்டு திருவண்ணாமலையில் தொடங்கப்பட்ட சோல்ஃப்ரீ தன்னார்வ அமைப்பிற்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் ஊரகத் தொழில்கள் மற்றும் சிறுதொழில் துறை அமைச்சர், மாண்புமிகு த.மோ. அன்பரசன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அடையார் ஆனந்த பவன் சார்பில், நிர்வாக இயக்குனர்கள் திரு கே. டி. வெங்கடேசன் மற்றும் திரு. கே.டி. சீனிவாச ராஜா ஆகியோர் விருதினை பெற்றுக்கொண்டனர்.

சோல்ப்ரீ அமைப்பின் சார்பில், அதன் அறங்காவலர், செல்வி ப்ரீத்தி சீனிவாசன் விருதை பெற்றுக்கொண்டார்.

விருது பெற்றவர்களின் சேவைகளைப் வாழ்த்திப் பேசிய அமைச்சர் அன்பரசன், விருது பெற்றவர்கள் தத்தம் துறைகளில் சிறந்து விளங்கிவருவதைப் பற்றி குறிப்பிட்டு சமூகத்திற்கான அவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது என குறிப்பிட்டு வாழ்த்தினார்.

மட்டுமல்லாது தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் சீரான தலைமையில், தமிழகத்தின் சிறு மற்றும் குறுதொழில்களின் அதிவேக வளர்ச்சிக்காக அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்ச்சிகள் குறித்தும் விரிவாகக் குறிப்பிட்டார்.

நிகழ்வில் வரவேற்புரை ஆற்றிய ஹிந்துஸ்தான் வர்த்தக சபையின் தலைவர் வ. நாகப்பன், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் MSME துறையின் மிக முக்கியமான முயற்சியான ஒற்றைச் சாளர’ இணையம் முயற்சியை இந்துஸ்தான் வர்த்தக சபை சார்பாக பாராட்டினார். பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து சிறு/குறு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை துவங்குவதற்குத் தேவையான ஒப்புதல்கள், முன் அனுமதிகள் மற்றும் தடையில்லாச் சான்றிதழ்கள் (NoCs) ஆகியவற்றைப் பெறுவதை இந்த ஆன்லைன் ஒற்றைச் சாளர முறை எளிமையாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

வரும் ஆண்டுக்கான, சேம்பரின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள விஜய் பி. சோர்டியா நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

—————

கடந்த காலங்களில், பின்வரும் பல தலைசிறந்த நிறுவனங்கள், முன்னனி தொழிலதிபர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் கல்வியாளர்களுக்கு ‘ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்’ விருதுகள் வழங்கப்பட்டன.

டாக்டர் சாந்தா, கேன்சர் இன்ஸ்டிடியூட்
திரு. சி.கே. ரங்கநாதன், கவின்கேர்
டாக்டர் பி.சி.ரெட்டி, அப்பல்லோ மருத்துவமனை
டாக்டர் ஆனந்த், ஐ.ஐ.டி. மெட்ராஸ்
திரு. சந்தானம், செயிண்ட் கோபேய்ன்
திரு. கே.பி. ராமசாமி, கே.பி.ஆர். மில்ஸ்
டாக்டர் என். காமகோடி, சிட்டி யூனியன் வங்கி லிட்
திரு. சி. பார்த்திபன், கேப்ளின் பாயின்ட் லேபரட்டரீஸ் லிமிடெட்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here