ஆண்டு தோறும் அக்டோபர் 1-ம் தேதி சர்வதேச முதியோர் தினம். அதையொட்டி முதியோர்களைக் கெளரவிக்க ஏற்பாடு செய்த ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா‘ தொண்டமைப்பு, அவர்களது திறமையை வெளிப்படுத்தவும் களம் அமைத்துக் கொடுக்க தீர்மானித்தது.
அதன்படி, சென்னையில் நடந்த முதியோர் தின கொண்டாட்ட நிகழ்வில் பிரபல மருத்துவர் பத்மஸ்ரீ வி.எஸ்.நடராஜனின் முதியோர் நலன் சார்ந்த சேவைகளைப் பாராட்டி ஊக்குவிக்கும் விதத்தில், ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’வின் முதன்மை நிர்வாகிகள் முன்னிலையில் கோல்டன் விருது வழங்கப்பட்டது.
விருதினைப் பெற்றுக் கொண்ட வி.எஸ். நடராஜன், இந்தியாவில் முதியோர் நலனுக்கான தனி மருத்துவப் பிரிவு தன்னால் தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். முதியோர் நலனுக்காக தான் என்னவெல்லாம் செய்துள்ளேன் என்பதையும், செய்யவிருப்பதையும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் இந்திய ரயில்வே அமைச்சகத்தின் முதன்மை நிதி ஆலோசகர், உஷா வேணுகோபால், ஐ.ஆர்.ஏ.எஸ்., கெளரவ விருந்தினராக கலந்து கொண்டு, சுகாதார சுவரொட்டியை வெளியிட்டார்.
சென்னை, டிவிஎஸ் எஸ்சிஎஸ் குளோபல் ஃபிரைட் சொல்யூஷன்ஸ் லிமிடெட் தலைவர் ரஜினி ஸ்ரீராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூத்த குடிமக்கள் சங்கங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை, எஸ்பிஓஏ மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர், டாக்டர் நித்திஷ் ஆந்த்ரேயா ராஜா சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.
தாடிகொண்டா வத்சலா ராமச்சந்திரா (டிவிஆர்) அறக்கட்டளை உறுப்பினர்களால் ஆதரவற்ற முதியோர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் வழங்கப்பட்டது.
காலை முதல் மாலை வரை நடந்த நிகழ்வில் முதியோருக்கு குரூப் டான்ஸ், ஃபேன்ஸி டிரெஸ், சூப்பர் தாத்தா மற்றும் சூப்பர் பாட்டி என பல்சுவைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் நடுவர்களாக இருந்தனர்.
தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம் செயலாளரும் மாவட்ட நீதிபதியுமான ஏ. நசீர் அகமது தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, கிங் தாத்தா மற்றும் குயின் பாட்டிக்கு கிரீடம் அணிவித்தார். சென்னை அதுல்யா அசிஸ்டெட் லிவிங் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் டாக்டர் கார்த்திக் நாராயண். ஆர் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டு, ஸ்பான்சர்களை கெளரவிப்பதுடன், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
ஹெல்ப் ஏஜ் இந்தியா பற்றி…
ஹெல்ப் ஏஜ் இந்தியா ஒரு முன்னணி மனிதாபிமான, மேம்படுத்துதல் மற்றும் முனைப்பியக்க அமைப்பாக, 44 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் உள்ள முதியவர்களுக்கு பல்வேரு விதங்களில் சேவையாற்றுகிறது. முதியோர் நலன் சார்ந்த கொள்கையை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குகிறது.
சமூகங்களின் பதிவுச் சட்டம் XXI (1860) இன் கீழ் மதச்சார்பற்ற சமூக சேவை சங்கம் எண். S/9270 எனப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஹெல்ப் ஏஜ் இந்தியாவுக்கான நன்கொடைகளுக்கு I.T இன் பிரிவு 35AC & 80GGA இன் கீழ் 100% வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சட்டம், 1961
கூடுதல் விவரங்களுக்கு:
ஹெல்ப் ஏஜ் இந்தியா தமிழ்நாடு மாநிலத் தலைவர்
வி. சிவகுமார், 3C தியாகராஜா வளாகம்
853, பூந்தமல்லி உயர் சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை – 600 010
தொலைபேசி: (044) 25322149 / 8220044050
மின்னஞ்சல்: chennai@helpageindia.org

