‘ஹிப் ஹாப்’ ஆதி நடிப்பில் ‘வீரன்.’ படப்பிடிப்பு நிறைவு!

‘ஹிப் ஹாப்’ ஆதி கதாநாயகனாக நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பட வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தியேட்டர், ஓடிடி ன இரு தளங்களிலும் தொடர்ச்சியாக படைப்புகளைத் தயாரித்து வழங்கும் மிகச் சில தயாரிப்பு நிறுவங்களில் ஒன்றான சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

அந்த வகையில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்த ‘சிவக்குமாரின் சபதம்’ மற்றும் ‘அன்பறிவு’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றது!  அதையடுத்து மீண்டும் இணைந்துள்ள சத்யஜோதி -ஹிப்ஹாப் ஆதி கூட்டணிக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

‘வீரன்’ ஃபேண்டசி காமெடி ஆக்‌ஷன் எண்டர்டெயினராக உருவாகியுள்ளது. ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும் வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். இவர்களோடு போஸ் வெங்கட், முனீஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் இசை, டீசர், டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் தேதி ஆகியவை குறித்து விரைவில் தெரியவரும்.

படத்தின் தொழில்நுட்பக் குழு:

இசை: ஹிப்ஹாப் தமிழா ஆதி
ஒளிப்பதிவு: தீபக் D மேனன்,
எடிட்டிங்: GK பிரசன்னா,
கலை: NK ராகுல்,
ஸ்டண்ட்ஸ்: மகேஷ் மாத்யூ,
விளம்பர வடிவமைப்பு: டனே ஜான் (Tuney John),
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா (D’One),
படங்கள்: அமீர்,
ஆடை வடிவமைப்பாளர்: கீர்த்தி வாசன்

படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நிறைவடையும் தருவாயில் படத்தின் இசை, டீசர், டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் தேதி ஆகியவை குறித்தான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here