முதன்முறை இரட்டை வேடம்! இயக்குநர் கண்ணனோடு காளிகாம்பாளை தரிசித்த ஹன்சிகா! 

ஹன்சிகா முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிற, ஹாரர் கதைக்களத்தில் காமெடி த்ரில்லராக உருவாகவிருக்கும் இந்த படத்தை ஆர். கண்ணன் இயக்குகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியது. இயக்குநர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் 10-வது படம் இது.

இதனிடையே ஹன்ஸிகாவும் இயக்குநர் கண்ணனும் சென்னை காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர்!

படம் பற்றிய கூடுதல் தகவல்கள்:-

படத்தின் கதைக்கருவை எழுத்தாளர் மா.தொல்காப்பியன் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் முழு நீள திரைக்கதையாக சுவாரசியமான அம்சங்களுடன் உருவாக்கி வசனம் எழுதியுள்ளார்.

ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன் என பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தப்பட்டு 3 மாதங்களில் முடிவடையுமாம்.

தொழில்நுட்பக் குழு:- ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியம், சண்டைப் பயிற்சி : ஸ்டண்ட் சில்வா, மக்கள் தொடர்பு : ஜான்சன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here